Butter Coffee: நுரையீரல் பிரச்சனையா உங்களுக்கு? உடனடித் தீர்வுக்கு வெண்ணெய் காபி தான் பெஸ்ட்!

By Dinesh TGFirst Published Dec 12, 2022, 3:29 PM IST
Highlights

ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பல வியாதிகளை குணப்படுத்த முடியும். அவ்வகையில், வெண்ணெய் காபி செய்து குடிப்பதால், சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். 

அதிகமாக புகைப்படிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும். இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டாலும் மிக முக்கியப் பிரச்சனை என்றால், அது நுரையீரல் பாதிப்படைவது தான். இதனை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து சரிசெய்வது மட்டுமின்றி, புகைப்பிடிக்கும் பழக்கத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும், தொடக்கத்திலேயே இதனை சரி செய்யவில்லை எனில், வீசிங் போன்ற சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கி விடும். ஆகவே, நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் முதலில் உடனடியாக புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டியது அவசியமாகும்.

மேலும், வீட்டில் இருக்கும் அடுப்பு புகையை சுவாசிக்கும் சிறுவர்களுக்கு, இதனுடைய பாதிப்பு அதிகமாக இருக்கும். இதனால் சிறுவர்களுக்கு சளி, நிமோனியா, காச நோய் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தினந்தோறும் பழங்கள் மற்றும் கீரைகள் என ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, பீடி மற்றும் சிகரெட் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

வெண்ணெய் காபி

ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பல வியாதிகளை குணப்படுத்த முடியும். அவ்வகையில், வெண்ணெய் காபி செய்து குடிப்பதால், சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். இப்போது, வெண்ணெய் காபியை எப்படி செய்ய வேண்டும் எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

காபித் தூள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1/2 கப்
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு

Onion: வெங்காயத்தை இப்படி பயன்படுத்தினால் தலைமுடி வளர்ச்சிக்கு நல்லதாம்!

தயாரிப்பு முறை

முதலில் தண்ணீரை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து தண்ணீர் கொதிக்கும் நேரத்தில், அதில் காபித் தூள் மற்றும் உப்பு சிறிதளவு சேர்த்து இன்னமும் சில விநாடிகள் கொதிக்க வைக்க வேண்டும்.

அதன் பிறகு, வெண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு மிக்ஸியில் நன்றாக சில நிமிடங்கள் கலக்கிக் கொள்ள வேண்டும். பின்னர், காபி மற்றும் மிக்ஸியில் அரைத்த கலவை ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்த்து, சுமார் 2 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து, காபி கப்களில் ஊற்றிக் கொள்ள வேண்டும். இப்போது நாம் ஆவலுடன் எதிர்பார்த்த வெண்ணெய் காபி தயாராகி விடும். 

தினந்தோறும் வெண்ணெய் காபி செய்து குடித்து வந்தால், நுரையீரல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் குணமடைந்து விடும். ஆகையால், நுரையீரல் பிரச்சனையால் அவதிப்படும் நபர்கள், தொடர்ந்து வெண்ணெய் காபியை குடித்து வந்தால், சில நாட்களிலேயே நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

click me!