இந்த உடல் உபாதைகள் இருக்கிறதா? அப்படின்னா உங்களுக்கு பொட்டாசியம் குறைவு!!

By Kalai Selvi  |  First Published Feb 13, 2024, 1:13 PM IST

உங்கள் உடலில் பொட்டாசியம் குறைபாடு இருந்தால், உடலில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.


உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் ஒன்றுதான் பொட்டாசியம். இது மிக முக்கியமான கனிமங்களில் ஒன்றாக கருதப்படுகிறது மற்றும் உடலின் ஒவ்வொரு செல்லிலும் உள்ளது. உடலின் நான்கு முக்கிய எலக்ட்ரோலைட்டுகளில் பொட்டாசியம் கணக்கிடப்படுகிறது. இதனால்தான் பொட்டாசியம் உடலில் நீர் சமநிலை மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

Latest Videos

undefined

பொட்டாசியத்தின் பங்கு இதற்கு மட்டும் அல்ல. புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்திலும் இது ஒரு பங்கு வகிக்கிறது. தசை வலிமை முதல் நரம்பு செயல்பாடு வரை அனைத்திற்கும் இது தேவை. ஆனால் சில நேரங்களில் சில நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்வது, வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி, குறைந்த மெக்னீசியம் அளவுகள், அதிகப்படியான வியர்வை மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடு ஆகியவை பொட்டாசியம் அளவைக் குறைக்கலாம். உடலில் பொட்டாசியம் குறைவாக இருக்கும்போது,   உடலில் சில மாற்றங்கள் காணப்படும். எனவே, இக்கட்டுரையில் இது பற்றி விரிவாக பார்க்கலாம்.

தசை பலவீனம்:
உடலில் பொட்டாசியம் அளவு குறைவாக இருந்தால், அது உங்கள் தசை ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. இது தசைகளின் செயல்பாட்டைத் தடுக்கிறது மற்றும் தசைகளை சேதப்படுத்தும். இதன் காரணமாக ஒரு நபர் தசைகளில் விறைப்பு, வலி   மற்றும் பலவீனத்தை உணரலாம். வெளிப்படையான காரணமின்றி உங்கள் தசைகள் பலவீனமாகவும், சோர்வாகவும் உணர்ந்தால், உங்கள் உடலில் பொட்டாசியம் குறைவாக உள்ளது என்று அர்த்தம். 

இதையும் படிங்க:  உருளைக் கிழங்குகளை வெறுக்காதீர்கள்- இருதய நன்மைக்கு கிடைக்கும் அற்புதம்..!!

களைப்பாக உணர்வது:
நீங்கள் எப்போதும் சோர்வாக உணர்ந்தால். எந்த வேலையும் செய்யாமலும், கடின உழைப்பும் செய்யாமல் எப்போதும் சோர்வாக உணர்ந்தால், அது உடலில் பொட்டாசியம் பற்றாக்குறையாக இருக்கலாம். உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் செயல்பட சரியான அளவு பொட்டாசியம் தேவைப்படுகிறது. ஆனால் உடலில் பொட்டாசியம் அளவு குறைவாக இருக்கும்போது அது செல்கள் மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால், நபர் சோர்வு மற்றும் பொதுவான பலவீனத்தை அனுபவிக்கலாம். இருப்பினும், பல உடல்நலப் பிரச்சனைகளாலும் சோர்வு ஏற்படலாம், எனவே ஒருமுறை உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

இதையும் படிங்க:  Potassium Food: இதயம் காக்க பொட்டாசியம் நிறைந்த உணவுகள் அவசியம்...மிஸ் பண்ணீடாதீங்கோ..பாதிப்பு ஏற்படும்..?

மலச்சிக்கல் பிரச்சினை:
நீங்கள் சில காலமாக மலச்சிக்கல் பிரச்சனையை எதிர்கொண்டிருந்தால், அது உடலில் பொட்டாசியம் குறைபாடு காரணமாகவும் இருக்கலாம் . பொட்டாசியம் என்பது செரிமான அமைப்புக்கு முக்கியமான ஒரு கனிமமாகும். குறைந்த பொட்டாசியம் அளவு காரணமாக, வயிறு மற்றும் குடலின் தசைகள் சரியாக செயல்பட முடியாது, இதன் காரணமாக செரிமானத்தில் பிரச்சினைகள் ஏற்படும். மலச்சிக்கலைத் தவிர, நீங்கள் வயிற்றில் வீக்கம், வலி   மற்றும் பிடிப்புகள் ஆகியவற்றை உணரலாம்.

மனச்சோர்வு:
சிறந்த மன ஆரோக்கியம் மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு பொட்டாசியம் மிகவும் முக்கியமானது. நரம்பியக்கடத்தியான செரோடோனின் போக்குவரத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பொட்டாசியம் அளவு குறைவாக இருக்கும்போது,   ஒரு நபர் குழப்பம், மனநிலை மாற்றங்கள் மற்றும் மனச்சோர்வு போன்ற பல மனநலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். 

பொட்டாசியம் குறைபாட்டிற்கு என்ன சாப்பிட வேண்டும்?
உங்கள் உணவில் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை சேர்ப்பதன் மூலமும், சமச்சீர் உணவை பின்பற்றுவதன் மூலமும், உடலில் பொட்டாசியம் குறைபாடு எளிதில் சமாளிக்கலாம். அதற்கு நட்ஸ்கள், உலர் பழங்கள், கீரை வகைகள், வெள்ளை பீன்ஸ், பருப்பு வகைகள், வாழைப்பழம், தயிர், தேங்காய் தண்ணீர் மற்றும் பச்சை இலை காய்கறிகள் பொட்டாசியம் ஏராளமாக உள்ளது இவை உங்கள் அன்றாட உணவில் ஒரு அங்கமாக ஆக்குங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!