பண்டிகைக் காலங்களில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்.. புதிய கோவிட் மாறுபாடு குறித்து கவலைப்பட வேண்டுமா?

By Ramya s  |  First Published Nov 11, 2023, 9:03 AM IST

தீபாவளி சீசன் தொடங்கும் போது, குறிப்பாக காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு வைரஸ் நோய்கள் மனிதர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. ஏனெனில் வைரஸ் என்பது அதன் கட்டமைப்பை மாற்றிக்கொண்டே இருப்பதால் அதன் சிக்கல் சமாளிப்பது கடினமாக மாறி உள்ளது. ஒமிக்ரான் போன்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் JN.1 எனப்படும் புதிய மாறுபாட்டை உருவாக்கியுள்ளது, இது BA.2.86 இன் துணை வகையாகும். தீபாவளி சீசன் தொடங்கும் போது, குறிப்பாக காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

புதிய கொரோனா மாறுபாடு குறித்து WHO எச்சரிக்கை

Tap to resize

Latest Videos

உலக சுகாதார அமைப்பு (WHO) இரண்டு முக்கிய காரணங்களுக்காக இந்த மாறுபாடு குறித்து ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. முதலாவதாக, JN.1 ஆனது 40 க்கும் மேற்பட்ட பிறழ்வுகளுக்கு உட்பட்டுள்ளது, அதாவது இது 40 முறைக்கு மேல் உருமாறி உள்ளது. இது போன்ற விரைவான உரு மாற்றங்களை வெளிப்படுத்தும் முதல் கோவிட் மாறுபாடு எனக் குறிப்பிடுகிறது. இரண்டாவதாக, தற்போதுள்ள தடுப்பூசி மூலம் பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி இந்த மாறுபாட்டிற்கு எதிராக பயனற்றதாகத் தெரிகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை தவிர்க்கும் தன்மை இந்த மாறுபாட்டி உள்ளது. வடமேற்கு ஐரோப்பிய நாடான லக்சம்பேர்க்கில் கண்டறியப்பட்ட இந்த மாறுபாடு இப்போது இங்கிலாந்து, பிரான்ஸ், ஐஸ்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் வெளிப்பட்டுள்ளன. அதன் விரைவான பரவல் காரணமாக எச்சரிக்கையின் அவசரத் தேவையை வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்தியாவில் புதிய கொரோனா மாறுபாடு உள்ளதா?

JN.1 ன் எந்தவொரு வழக்குகளையும் இந்தியா இன்னும் பதிவு செய்யவில்லை என்றாலும், டெங்கு, மலேரியா, டைபாய்டு மற்றும் பல்வேறு வைரஸ் காய்ச்சல்கள் போன்ற நோய்களுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து போராடி வரும் நிலையில், இந்த புதிய பிறழ்வைக் கண்டறிவதில் உள்ள சவால்களை மருத்துவர்கள் நிபுணர்கள் எடுத்துரைத்துள்ளனர். குளிர்காலம் தொடங்கியவுடன், வைரஸ் காய்ச்சலிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வது கட்டாயமாகிறது.

இந்தியாவில் JN.1 மாறுபாட்டின் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்றாலும், இந்த மாறுபாடு கணிசமாக அதிக தொற்றுநோயாகப் புகழ் பெற்றது. BA.2.86 குடும்பத்தைச் சேர்ந்தது, JN.1 மாறுபாடு அதன் ஸ்பைக் புரதத்தில் 41 பிறழ்வுகளை வெளிப்படுத்துகிறது, இது அறியப்பட்ட மாறுபாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவு மாற்றம் ஆகும். முந்தைய மாறுபாடுகளைப் போலவே JN.1 மாறுபாட்டிற்கும் சளி, நெஞ்சு வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவற்றால் ஏற்படும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கின்றன. எனவே நோய்த்தொற்றை தடுக்க மாஸ்க் அணிவது, கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை பராமரிப்பது, காற்றோட்டமுள்ள அறைகளில் இருப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

click me!