வேகன் சைவ உணவை உண்பவர்கள், விலங்குகளில் இருந்து கிடைக்கும் பால், தயிர் போன்ற உணவுகளை கூட உண்ணமாட்டார்கள்.
Zhanna Samsonova என்ற 39 வயதான பல ஆண்டுகளாக முற்றிலும் சமைக்கப்படாத சைவ உணவை உட்கொண்டு வந்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த அவர், தொடர்ந்து தனது சமூக ஊடக கணக்குகளில் அடிக்கடி சமைக்கப்படாத பச்சை உணவுகளை விளம்பரப்படுத்தி வந்தார். இந்த நிலையில், அவர் பட்டினியால் இறந்ததாக கூறப்படுகிறது. அவர் தென்கிழக்கு ஆசியாவில் ஒரு சுற்றுப்பயணத்தின் போது இறுதியாக மருத்துவ சிகிச்சை பெற்ற பின்னர் ஜூலை 21 அன்று இறந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Zhanna Samsonova கடந்த 10 ஆண்டுகளாகவே தீவிர சைவ உணவைப் பின்பற்றி வந்தார். அதாவது வேகன் என்படும் சைவ முறையை பின்பற்றி வந்துள்ளார். வேகன் சைவ உணவை உண்பவர்கள், விலங்குகளில் இருந்து கிடைக்கும் பால், தயிர் போன்ற உணவுகளை கூட உண்ணமாட்டார்கள். அந்த வகையில் Zhannavவும் சமைக்கபடாத பச்சை சைவ உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவர் சோர்வுடன் காணப்பட்டதாக அவரின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
Zhanna Samsonova-வின் தாயார், "காலரா போன்ற தொற்றுநோயால்" தனது மகள் இறந்துவிட்டதாகக் கூறினார். இருப்பினும், மரணத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் இன்னும் வெளியாகவில்லை. கடந்த ஏழு ஆண்டுகளாக, பலாப்பழம் மற்றும் துரியன் ஆகிய பழங்களை மட்டுமே சாப்பிட்டார் என்று அவரின் நெருங்கிய நண்பர் கூறினார். Zhanna Samsonova தனது பச்சை உணவுக் கொள்கையைப் பரப்புவதற்கு தனது சமூக ஊடக கணக்குகளைப் பயன்படுத்தினார்.
ஒரு மாதம் அசைவ உணவை சாப்பிடவில்லை எனில், உடலில் என்ன நடக்கும்?