
சிறுநீர்ப்பாதை தொற்று(Urinary Tract Infection - UTI ) என்பது சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, சிறுநீர் குழாய் உள்ளிட்ட எந்தப் பகுதியிலும் ஏற்படும் ஒரு தொற்று ஆகும். பெரும்பாலானவர்களுக்கு சிறுநீர் பாதையில்தான் தொற்று ஏற்படுகிறது. பொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தான் இதனால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
ஆனால் தற்போது வளர்ந்து வரும் குழந்தைகளும் சிறுநீர்ப்பாதை தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் ஆண் பிள்ளைகளை காட்டிலும் பெண் பிள்ளைகள்தான் அதிகமாக பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கான காரணங்களும் அறிகுறிகளும் என்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு சிறுநீர்த்தொற்று வருவதற்கான காரணங்கள் :
- சிறுநீர் வெளியேறும் பாதையில் பாக்டீரியாக்கள் நுழைந்து பெருகும் போது சிறுநீர் தொற்று ஏற்படுகிறது. இதற்கு E coli இன்னும் பாக்டீரியா தான் முக்கிய காரணம்.
- சிறுநீர் கழித்த பிறகு அந்த இடத்தை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தாலோ அல்லது மலம் கழிக்கும் போது சிறுநீர் பாதிக்குள் கிருமிகள் சென்றாலோ சிறுநீர் தொற்று ஏற்படும்.
- சிறுநீர் கற்கள் அல்லது பிற பிரச்சனைகள் சிறுநீர் சரியாக வெளியேறவில்லை என்றால் இந்த தொற்று வரலாம்.
- சிறுநீர் பாதையில் பிறவி குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைக்கு சிறுநீர் பாதை தொற்று ஆபத்து அதிகரிக்கும்.
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ரொம்பவே குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு எளிதில் சிறுநீர் தொற்று வரும்.
- அதுபோல படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ள குழந்தைகளுக்கு சிறுநீர் தொற்று வரலாம்.
குழந்தைகளுக்கு சிறுநீர்த்தொற்றுக்கான அறிகுறிகள் :
இந்த அறிகுறிகள் உங்கள் குழந்தை இடம் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சையை எடுப்பது மிகவும் அவசியம்.
சிறுநீர்ப்பை அல்லது குடல் செயல்பாட்டுக் கோளாறுகள் உள்ள குழந்தைகளுக்கும் சிறுநீர் தொற்றுக்கான ஆபத்து அதிகம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அடிக்கடி ஏற்படும் தொற்றுகள் சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். சில சமயங்களில், நோயாளிகளுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம். எனவே, மீண்டும் மீண்டும் சிறுநீர் தொற்று பிரச்சனை உள்ள குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் இரத்த அழுத்தப் பரிசோதனை மற்றும் புரதங்களுக்கான சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.