Onion: வெங்காயத்தை இப்படி பயன்படுத்தினால் தலைமுடி வளர்ச்சிக்கு நல்லதாம்!

By Dinesh TGFirst Published Dec 10, 2022, 6:29 PM IST
Highlights

வெங்காயத்தை சாப்பிட பிடிக்கவில்லை என்றால், ஜூஸ் போட்டும் குடிக்கலாம். வெங்காயத்தை ஜூல்ஸ் போட்டு தலைமுடிக்கு தடவி வந்தால், தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

அன்றாட சமையலில் அனைவரும் பயன்படுத்தும் ஒரு முக்கிய உணவுப் பொருள் வெங்காயம். இது உணவின் உடைய சுவையைக் அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு பலவிதமான நன்மைகளை அள்ளிக் கொடுக்கிறது. இதில் இருக்கும் ஆன்டி செப்டிக், ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலை பல்வேறு நோய்களில் இருந்து  பாதுகாக்கிறது. வெங்காயத்தை அப்படியே சாப்பிட்டாலும் பல நன்மைகள் கிடைக்கும். பச்சயாக வெங்காயத்தை சாப்பிட பிடிக்கவில்லை என்றால், ஜூஸ் போட்டும் குடிக்கலாம். வெங்காயத்தை ஜூல்ஸ் போட்டு தலைமுடிக்கு தடவி வந்தால், தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

வெங்காயச் சாறு

பருவ காலத்தில் உண்டாகும் நோய்களுக்கு எதிராகவும் வெங்காயம் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. இதனுடைய சாறு காய்ச்சலை குணப்படுத்த பயன்படுகிறது. குளிர்காலத்தில் தான் கூந்தலில் பொடுகுத் தொல்லை பெரும்பாலும் அதிகரிக்கும். இந்த சமயத்தில் தலைமுடி வேகமாக உதிரத் தொடங்கும்.  பொடுகுத் தொல்லை மற்றும் முடி உதிர்தலில் இருந்து விடுபட வெங்காயச் சாறு நல்ல பலனைத் தரும் என்று கூந்தல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வெங்காயச் சாற்றை எப்படி பயன்படுத்துவது மற்றும் அதன் நன்மைகள் குறித்து விரிவாக காண்போம்.

வெங்காயச் சாற்றை எப்படி பயன்படுத்துவது

பொடுகுத் தொல்லை மற்றும் குளிர்காலத்தில் விரைவான முடி உதிர்வதலுக்கு எதிராக வெங்காயச் சாறு மிக நன்றாகச் செயல்படுகிறது. 

தேன் மற்றும் வெங்காயச் சாறு

தேன் மற்றும் வெங்காயச் சாறு ஆகிய இரண்டும், தலைமுடிப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு உதவி புரிவதாக கூந்தல் பராமரிப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தலைமுடியை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. வெங்காய சாற்றின் பொதுவான பயன்பாட்டின் மூலம், கூந்தலின் பளபளப்பு பராமரிக்கப்படுவது மட்டுமின்றி, கூந்தலும் அடர்த்தியாகிறது.

Fruits: பழங்களை சாப்பிடும் போது தப்பித் தவறிக் கூட இந்த தப்ப செய்யாதிங்க!

எலுமிச்சை மற்றும் வெங்காயம்

குளிர்காலத்தில் கூந்தலை சரியாக பராமரிக்க வேண்டியது அவசியமாகும். இல்லையென்றால் கூந்தல் வேகமாக மோசமடையத் தொடங்குகி விடும். எலுமிச்சை மற்றும் வெங்காய சாறு ஆகிய இரண்டும் கூந்தல் பிரச்சனைகளை நீக்கிவிட்டு, அதன் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.

முட்டையின் பயன்பாடு

தலைமுடி பராமரிப்பில் முட்டையைப் பயன்படுத்துவது மிகுந்த நன்மையை அளிக்கிறது. இதில் இருக்கும் புரோட்டீன்கள், வைட்டமின்-பி, பயோட்டின் மற்றும் இதர சத்துக்கள் தலைமுடியை ஆரோக்கியமாக்குகிறது. வெங்காயச் சாற்றுடன் இதனைப் பயன்படுத்தலாம். இதனுடைய சாறு உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடி வளர்ச்சிக்கும் உதவி செய்கிறது. 

click me!