Pimples Scars: முகப்பருவால் உருவான தழும்பை அழிக்க என்ன செய்ய வேண்டும்: எளிய டிப்ஸ் இதோ!

By Dinesh TGFirst Published Dec 10, 2022, 4:25 PM IST
Highlights

முகப்பருக்களால் வரும் தழும்புகள் நீண்ட நாட்களாக இருக்கும். இதனை எளிதாக எப்படி நீக்குவது என்பதனை இங்கே காண்போம்.

இன்றைய தலைமுறையினரில் பலரும் சந்திக்கும் ஒரு பெரும்பாலான பிரச்சினை தான் முகப்பரு. இவை சில நேரங்களில் ஹார்மோன் மாற்றத்தினாலும் வரும். முகப்பருக்கள் வந்துவிட்டாலே சிலரது மனம் கவலையில் ஆழ்ந்து விடும். முகத்தில் இருக்கும் புன்னகையும் மறைந்து, முகம் வாடி விடும். எப்போது தான் முகப்பரு மறையுமோ என்று அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார்கள். இது முற்றிலும் உண்மை தான். ஏனெனில் முக அழகை பராமரிப்பதில் இன்றைய தலைமுறையினர் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம் முகப்பரு பெரிய பிரச்சனையாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இப்படியாக வருகின்ற முகப்பருக்கள் ஒருசில நாட்களில் தானாக மறைந்து விடும். அதிலும் சீழ் நிறைந்துள்ள முகப்பருக்கள் இருப்பின், அதனை மிகவும் கவனமாக கையாள வேண்டியது அவசியமாகும். இல்லையென்றால் அதன் சீழ் முகத்தில் பரவி, அதிக முகப்பருக்களை வரவழைத்து விடும். எனவே இதனை தொடக்கத்திலேயே போக்குவது தான் சிறந்நது. மேலும், முகப்பருக்களால் வரும் தழும்புகள் நீண்ட நாட்களாக இருக்கும். இதனை எளிதாக எப்படி நீக்குவது என்பதனை இங்கே காண்போம்.

முகப்பருக்களை அழிக்கும் முறைகள்

சாலிசிலிக் அமில ஜெல்லை 2% எடுத்து, இரவு தூங்குவதற்கு முன்பாக முகப்பருக்களின் மீது அல்லது முகப்பருவால் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவிய பின், இரவு முழுவதும் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் முகத்தை கழுவ வேண்டும். இதனால் இந்த ஜெல் முகப்பருவில் உள்ள சீழை முற்றிலும் வற்றச் செய்து, தழும்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. 

Hip Pain: இடுப்பு வலியை குறைக்க உதவும் சூப்பர் பானம்: குடிச்ச உடனே நிவாரணம் கிடைக்கும்!

சிறிதளவு பேக்கிங் சோடாவை நீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். முகத்தினை சுத்தம் செய்து, ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள பேக்கிங் சோடா பேஸ்ட்டை, முகப்பருவின் மீது தடவி, இரவு முழுக்க ஊற வைக்க வேண்டும். பின்னர், அடுத்த நாள் காலையில் முகத்தை கழுவ வேண்டும். இப்படிச் செய்வதன் மூலமாக முகப்பருக்கள் தழும்புகள் இன்றி மறையும்.

வெள்ளை வினிகரை எடுத்து அதன் சில துளிகளை முகப்பருக்கள் மீது தடவ வேண்டும். ஆனால், வெள்ளை வினிகரை தடவுவதற்கு முன்பாக, முகத்தினை நன்றாக சுத்தம் செய்து உலர்த்தி இருக்க வேண்டும். பின்னர், வெள்ளை வினிகரை தடவி அப்படியே உலர்த்தி விட வேண்டும். இப்படி செய்தால், அது முகப்பருவை குறைப்பதோடு மட்டுமல்லாமல் விரைவில் தழும்புகள் இன்றி முகப்பருக்கள் மறையும்.  

முகத்தில் முகப்பருக்கள் அதிகம் இருக்கும் சமயத்தில், பென்சாயில் பெராக்சைடு கொண்ட ஜெல், க்ரீம் அல்லது டோனர் போன்ற எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

click me!