Young forever: எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமா? இந்த பருப்பை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!

By Dinesh TGFirst Published Dec 1, 2022, 8:15 PM IST
Highlights

மைசூர் பருப்பு சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி, சரும நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், சருமத்தை நீண்ட காலத்திற்கு இளமையாக வைத்துக் கொள்ளும். அவ்வகையில் மைசூர்ப் பருப்பை எதனுடன் சேர்த்துப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்று இங்கே காண்போம்.

முக அழகை பராமரிப்பதில் இன்றைய இளம் தலைமுறையினர் அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர். அதற்காக இவர்கள் பல முயற்சிகளை எடுக்கின்றனர். அதிலும் சிலர் கடைகளில் விற்பனையாகும் கண்ட கண்ட பூச்சுகளை முகத்திற்கு பயன்படுத்துகின்றனர். ஆனால், அவையனைத்தும் சருமத்தைப் பாழாக்குகிறது. அதற்குப் பதிலாக வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தினால், மிக எளிய முறையில் முகத்தை இளமையாக வைத்துக் கொள்ள முடியும். இதற்கு மைசூர் பருப்பு பெரிதும் உதவுகிறது. இது சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி, சரும நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், சருமத்தை நீண்ட காலத்திற்கு இளமையாக வைத்துக் கொள்ளும். அவ்வகையில் மைசூர்ப் பருப்பை எதனுடன் சேர்த்துப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்று இங்கே காண்போம்.    

முக அழகை மேம்படுத்தும் வழிகள்

ஒரு கிண்ணத்தில் மைசூர்ப் பருப்பு பொடி மற்றும் கடலை மாவை சம அளவில் எடுத்துக் கொண்டு, காய்ச்சாத பாலை அதில் ஊற்றி பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை முகத்தில் தடவி, நன்றாக காய்ந்த பிறகு, குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும்.

மைசூர்ப் பருப்பு பொடியுடன், தேன் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். இதுவே சாதாரண சருமம் உடையவரானால், தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை முகத்தில் தடவி, நன்றாக காய்ந்த பிறகு, குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.

Hair Shiny: தலைமுடியை பளபளப்பாக வைத்து கொள்ள வாழைப்பழத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க!

ஒரு டீஸ்பூன் மைசூர்ப் பருப்பு பொடியுடன், 1 டீஸ்பூன் கிளிசரின், 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள். பின்னர், அந்த பேஸ்ட்டை முகத்தில் நன்கு தடவி, நன்றாக காய்ந்த பிறகு குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இதனை  வாரத்திற்கு ஒருமுறை போட்டு வந்தால், முகப்பரு பிரச்சனையை முற்றிலுமாக தவிர்க்கலாம்.

மைசூர்ப் பருப்பு பொடியுடன் சூடுபடுத்தப்படாத பச்சை பால் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். பின்னர், அதனை முகத்தில் தடவி நன்றாக காய்ந்த பிறகு, குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இப்படியாக தினந்தோறும் செய்து வந்தால், சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி, சருமத்தின் நிறம் மேம்படுகிறது.

click me!