வெந்தயம், கஞ்சித் தண்ணிர் மூலம் முடிக்கு கிடைக்கும் அற்புதம்..!!

By Asianet TamilFirst Published Mar 16, 2023, 10:52 PM IST
Highlights

முடி வளர்ச்சிக்கு வைட்டமின்கள் அவசியம். வைட்டமின் குறைபாட்டால் முடி உதிர்வு அடிக்கடி ஏற்படுகிறது. எனவே, முடி ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
 

முடி உதிர்தல் மற்றும் பொடுகு ஆகியவை இன்று பலர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளாக உள்ளன. பல காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது. சில வாழ்க்கைமுறை மாற்றங்கள் உங்கள் தலைமுடியைக் காப்பாற்றும். முடி வளர்ச்சிக்கு வைட்டமின்கள் அவசியம். வைட்டமின் குறைபாட்டால் முடி உதிர்வு அடிக்கடி ஏற்படுகிறது. எனவே, முடி ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் கூந்தல் பராமரிப்பிற்கு செய்ய வேண்டிய வேறு சில விஷயங்கள் உள்ளன. சில ஹேர் மாஸ்க்குகள் முடி உதிர்வதைத் தடுத்து முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. அந்த வகையில் வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய சில ஹேர் மாஸ்க்குகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

வெந்தயம்

வெந்தய விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் கூழ் வடிவில் அரைத்து எடுக்கவும். அதில், செம்பருத்தி பூமற்றும் இலைகள், தயிர், முட்டை மற்றும் சில துளிகள் லாவெண்டர் எண்ணெய் சேர்க்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து, இந்த கலவையை உங்கள் தலைமுடியில் தடவலாம். 20 நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் தலையை ஷாம்பூ போட்டு கழுவினால், தலை சுத்தமாகிவிடும். 

நெல்லிக்காய்

நெல்லிக்காயை தோல் நீக்கி அரைக்கவும். பின் அதனுடன் சிறிது தயிர் சேர்த்து தலையில் தடவவும். அரை மணி நேரம் கழித்து கழுவவும். இந்த ஹேர் மாஸ்க் பொடுகு மற்றும் முடி உதிர்வை குறைக்க உதவுகிறது.

வெங்காயச் சாறு

ஒரு வெங்காயத்தின் சாறு, அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றைக் கலந்து, உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் தடவவும். அரை மணி நேரம் கழித்து, லேசான ஷாம்பு கொண்டு தலையை அலசவும். இதன்மூலமாகவும் தலையில் இருந்து பொடுகு நீங்கிவிடும்.

அப்படியானல் உங்களுடைய மணவாழ்க்கையில் ஏதோ பிரச்னை உள்ளது என்று அர்த்தம்.!!

கஞ்சிச் சாறு

ஒரு கப் கஞ்சி தண்ணீருக்கு 20 கிராம் வெந்தயத்தை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளவும். வெந்தய விதைகளை ஒரே இரவில் கஞ்சி தண்ணீரில் விடவும். பிறகு காலையில் வெந்தய விதைகளை வடிகட்டலாம். இந்த கஞ்சி தண்ணீரை ஈரமான கூந்தலில் தெளிக்கலாம் அல்லது பிரஷ் மூலம் தடவலாம். பத்து நிமிடம் கழித்து கழுவினால் தலை சுத்தமாகி விடும். 
 

click me!