வீட்டில் பிஸ்கட் இருந்தால் போதும்! சுட சுட அல்வா ரெடி!

By Asianet Tamil  |  First Published Mar 16, 2023, 9:51 PM IST

வாருங்கள்! நெய்யின் கமகம வாசனையில்,தித்திப்பான பிஸ்கட் அல்வா ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


இனிப்பு வகைகளில் ஒன்றான அல்வாவை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். கமகம நெய் மணமும் இனிப்பு சுவையும் நாவை சுண்டி இழுக்க செய்து சாப்பிட வைக்கும். அல்வாவில் கோதுமை அல்வா , பால் அல்வா ,தினை அல்வா, பண் அல்வா அசோகா அல்வா என்று இன்னும் பல விதமான அல்வாக்களை நாம் சுவைத்து இருப்போம். அந்த வகையில் இன்று நாம் வீட்டில் இருக்கும் பிஸ்கட் வைத்து சூப்பரான சுவையில் அட்டகாசமான ஒரு அல்வா ரெசிபியை வீட்டில் செய்ய உள்ளோம்.

இதனை மிக குறைந்த நேரத்தில் செய்யலாம். இதன் சுவை அருமையாக இருப்பதால் குழந்தைகள், பெரியவர்கள் என்ற பேதமின்றி அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய விதத்தில் இதன் சுவை தித்திப்பாக இருக்கும். இனி வீட்டில் வர இருக்கும் விசேஷங்களான பிறந்த நாள், திருமண நாள் அல்லது பண்டிகை நாட்களில் இந்த பிஸ்கட் அல்வா ரெசிபியை செய்து அனைவரது அன்பையும் பெறலாம். மேலும் வீட்டில் கெஸ்ட்டாக வருபவர்களுக்கும் இதனை செய்து கொடுத்து அசத்தலாம்.

வாருங்கள்! தித்திப்பான பிஸ்கட் அல்வா ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

பிஸ்கட் பாக்கெட் - 2
பால் - 1/2 லிட்டர்
நெய் - 150 கிராம்
முந்திரி - 100 கிராம்

மூட்டுவலியை மட்டுமில்ல முன்ஜென்ம வினைகளையும் போக்கக்கூடிய சக்தி இந்த ''பிரண்டைக்கு'' உண்டு என்று தெரியுமா!

செய்முறை :

முதலில் மில்க் பிஸ்கட்களை வாங்கி அதனை சிறு துண்டுகளாக உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு சாஸ் பான் வைத்து அதில் பால் ஊற்றி, 1 க்ளாஸ் தண்ணீர் ஊற்றி கெட்டியாக மாறும் வரை காய்ச்சிக் கொள்ள வேண்டும். அடுத்தாக அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் நெய் சேர்த்து உருகிய பின்னர் பொடித்து வைத்துள்ள முந்திரியை சேர்க்க வேண்டும்.

Latest Videos

undefined

முந்திரி நன்கு சிவந்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இப்போது கடாயில் இருக்கும் நெய்யினை சிறிது எடுத்து தனியாகஒரு பௌலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கடாயில் இருக்கும் நெய்யில் உடைத்து வைத்துள்ள பிஸ்கட் பீஸ்களை சேர்த்து வதக்கி விட வேண்டும்.

பிஸ்கட் வதங்கிய பின் அதில் காய்த்து வைத்துள்ள பாலை ஊற்ற வேண்டும். பால் ஊற்றிய பிறகு, கடாயில் இருக்கும் கலவையை கைவிடாமல் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும். கட்டிகள் தட்டாதவாறு கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும்.
கலவை அல்வா பதத்தில் வந்த பிறகு அதில் எடுத்து வைத்துள்ள நெய் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். அவ்ளோதான் நெய்யின் கமகம மணத்தில் பிஸ்கட் அல்வா ரெடி!

click me!