வீட்டைக் கட்டிப் பார், திருமணம் செய்து பார் என்கிற பழமொழி நடைமுறையில் உண்டு. இப்போதெல்லாம் திருமணம் செய்வது எளிதான காரியம் கிடையாது. ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்தால், பெற்றோருக்கு அதை திருமணம் செய்து கொடுப்பது தான் முக்கிய கடமையாக இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் ஒரு ஆணுக்கு திருமணம் முடிப்பது தான் பெரும் சவாலாக உள்ளது. ஆணின் திருமணத்துக்கு மணமகள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது.
திருமணத்திற்கு அன்பு, மரியாதை, குடும்பம் மட்டுமல்ல பணமும் முக்கியம். பழங்காலத்திலிருந்தே, ஒரு பண்பட்ட பெண் மற்றும் பணக்கார பையனைத் தேடுவது உண்டு. ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலை செய்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் திருமணத்திற்குப் பிறகு அவள் வேலை செய்ய வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. ஆனால் ஆண்கள் வேலையை விட முடியாது. ஒரு மனிதன் சம்பாதித்தால் மட்டுமே குடும்ப பராமரிப்பு சாத்தியம் என்று நம்பப்படுகிறது. அதனால்தான் ஆண்கள் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள். இந்திய மேட்ரிமோனியல் தளமான ஷாதி.காம் வெளியிட்ட ஆய்வில், இந்திய பெண்கள் திருமணத்திற்கு முன் ஆண்களின் சம்பளப் பட்டியலைப் பார்க்கிறார்கள். அதிகம் சம்பாதிக்கும் பையனே பெண்களின் முதல் தேர்வாக உள்ளது என்று கூறுகிறது. ஒருவேளை இந்த கட்டுரையை படிக்கும் உங்களுக்கு இன்னும் திருமணமாகாமல் இருந்திருந்தால், அதற்கு உங்கள் சம்பளம் தான் காரணம் என்பது இந்நேரம் புரிந்திருக்கும்.
திருமணத்தில் பணத்தின் பங்கு
தம்பதியர் மட்டுமல்ல, அனைவரும் வாழ பணம் தேவை. அன்பும் மரியாதையும் மட்டுமே கொண்டு வாழ்க்கையை வாழ்வோம் என்பதை கேட்க நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இது உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளது. திருமணத்திற்கு பிறகு செலவு அதிகமாகும். அதனால்தான் மணமகன் திருமணத்திற்கு முன்பு எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதை மணமகளின் குடும்பத்தினர் தெரிந்துகொள்ள முயலுகின்றன. இதில் எந்தவிதமான தவறும் கிடையாது, இதுவொரு எதார்த்த மனநிலை தான்.
பணத்தால் விவாகரத்து ஏற்படுகிறது
ஒருவரின் நிதி நிலைமை அவரது திருமண முறிவுக்கு வழிவகுக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கு பலவிதமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. குடும்பம் மற்றும் குழந்தைகளை பராமரிக்க பணம் தேவைப்படுகிறது. அது கிடைக்காமல் போனால், பிரச்னை உருவாகும். அதற்கு ஒரு முடிவில்லாமல் தொடரும் பட்சத்தில் விவாகரத்தில் போய் முடியும். இப்போதெல்லாம் ஆண்களுக்கு நிகராக பெண்களும் உழைக்கிறார்கள். ஆனால், தன்னைவிடக் குறைவாகச் சம்பாதிக்கும் கணவனை பெண்கள் ஏற்பது கிடையாது. தன்னைவிட அதிகப் பணம் வைத்திருக்கும் மனிதனைக் கணவனாகத் தேர்ந்தெடுக்கவே பெண்கள் விரும்புகின்றனர்.
திருமணத்திற்கு பிறகு ஆண்கள் ஏன் சம்பாதிக்க வேண்டும்?
இது தற்போதைய விதி அல்ல. இது பழங்காலம் தொட்டே நடைமுறையில் இருக்கிறது. பெண்கள் வீட்டு வேலைகளையும், ஆண்கள் வெளியில் வேலை செய்ய வேண்டும் என்கிற மரபு உள்ளது. இன்றும் இது பின்பற்றப்பட்டு வருகிறது. ஒரு ஆண் வீட்டில் தங்கி, அவனது மனைவி வெளியில் வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டாலும், அதை சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் இதற்கு குடும்ப உறுப்பினர்களும் உடன்படுவதில்லை.
பிறப்புறுப்பு பகுதியில் பருக்கள் தோன்றுவதற்கான 5 காரணங்கள்..!!
பெண் குழந்தை பெற எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்? :
இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் ஆண்டுக்கு 7 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் ஆண்களையே விரும்புகிறார்கள். வருடாந்திர ஸ்லாப் இதை விட அதிகமாக இருந்தால், தகுதி குறைக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் 30 லட்சத்திற்கு மேல் உள்ள பையனை திருமணம் செய்ய பெண்கள் முதல் முன்னுரிமை கொடுப்பதாக தெரிகிறது. அறிக்கையின்படி, பெண்கள் பொருளாதார ரீதியாக வலுவான மற்றும் அவரது ஆசைகளை ஒப்புக் கொள்ளும் ஒரு ஆணையே கணவனாக அடைய விரும்புகிறார்கள்.