திருமணமான ஆண்கள் “பிறர் மனை நோக்குவது” ஏன்..??

By Asianet Tamil  |  First Published Mar 10, 2023, 2:18 PM IST

மற்றவர் மனைவி மீது ஈர்ப்பு ஏற்படும் ஆண்கள் அனைவரும் கள்ள உறவை ஏற்படுத்துவது கிடையாது. ஒருசிலர் மட்டுமே மனைவியை ஏமாற்றிவிட்டு, மற்ற பெண்களுடன் காதலை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
 


திருமணமான ஆண்கள் பலரும் மற்றவர் மனைவிமார்கள் மீது ஈர்ப்பை உருவாக்கிக் கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவ்வப்போது அவர்களை ரகசியமாக பார்ப்பது, அவர்கள் தங்களை பார்க்கும் போது முகத்தை திருப்பிக் கொள்வது, அவர்களுடன் ஒரு நட்பை ஏற்படுத்திக் கொள்வது போன்றவை அந்த பெண்கள் மீதான ஆணின் ஈர்ப்பை காட்டுகிறது. பொதுவாகவே திருமண பந்தத்துக்குள் நுழைந்த ஆண்கள் பலர், தாங்கள் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக உணர்கின்றனர். அப்போது எழும் வெளிப்பாடு தான், பிறர் மனையை நோக்கும் செயல். எனினும் மற்றவர் மனைவி மீது ஈர்ப்பு ஏற்படும் ஆண்கள் அனைவரும் கள்ள உறவை ஏற்படுத்துவது கிடையாது. ஒருசிலர் மட்டுமே மனைவியை ஏமாற்றிவிட்டு, மற்ற பெண்களுடன் காதலை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் இந்த பதிவில், திருமணமான ஆண்கள் மற்ற ஆண்களின் மனைவிகளால் ஈர்க்கப்படுவதற்கான உளவியல் காரணங்களைப் பார்ப்போம்.

போதாத திருமண வாழ்க்கை

Latest Videos

தன்னுடைய திருமண உறவில் திருப்தியடையாத ஆண்களே பெரும்பாலும் கள்ள உறவை உருவாக்கிக் கொள்கின்றனர். இந்த அதிருப்தி பொதுவாக ஆணுக்கும் மனைவிக்கும் இடையே குறைவான தொடர்பு அல்லது புரிதல் இருக்கும்போது எழுகிறது. அதனால் தான் மற்ற பெண்களை பார்க்கும் போது, ஆண்களுக்கு ஆர்வம் உருவாகிறது. அவர்கள் தங்கள் உணர்வுகளுக்கு ஏற்ப செயல்பட முடிவு செய்தால், அது ஆண்களை ஏமாற்றத்தைக் கூட சந்திக்க வைக்கும்.

இளமையான உணர்வு

ஒரு திருமணமான ஆண், பரிசோதனை செய்யும் மனநிலையில் இருக்கும்போது மற்ற திருமணமான பெண்களைப் பார்க்கிறான். ஆண்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி அல்லது தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, புதிய விஷயங்களை பரிசோதிக்க விரும்புகிறார்கள். இது அவர்களை எப்போதும் இளமையாக வைத்திருக்கும் உணர்வை தருகிறது. இதன்காரணமாகவே ஆண்கள் மற்ற பெண்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர்.

உள்ளாடை அணியாமல் விட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

வாழ்க்கை ஒப்பீடு

பல ஆண்கள் தங்களுடைய திருமண வாழ்க்கை மற்றும் மனைவிமார்களை, மற்ற ஆண்களின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர். இதை பெரும்பாலும் எல்லாவிதமான ஆண்களும் செய்கின்றனர் என்று கூறலாம். அதேபோன்று பெண்களும் அப்படி தான். எனினும் ஒரு ஆணுக்கு இப்படிப்பட்ட உணர்வு ஏற்படுகையில், அது உறவுச் சிதைவுக்கு வழிவகுக்கிறது. இதனால் கணவனுக்கு மனைவி மீதான அன்பு மற்றும் இரக்கம் போன்ற உணர்வுகள் இல்லாமல் போய்விடுகிறது. இதனால் பிறர் மனை நோக்கும் செயல்பாடு ஆண்களுக்குள் இயல்பாக வந்துவிடுகிறது.
 

click me!