நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதே என்று மணமக்கள் வரம்பு மீறிவிடக்கூடாது..!!

By Asianet Tamil  |  First Published Mar 10, 2023, 11:06 AM IST

புதியதாக ஏற்படவுள்ள உறவில் இரு தரப்பினரும் மகிழ்ச்சியை அடைய வேண்டும். அதனால் நிச்சயம் தான் ஆகிவிட்டதே என்று மணமக்களும் சரி, குடும்பத்தினரும் சரி வரம்பு மீறி நடந்துவிடக் கூடாது. 
 


நிச்சயத்துக்கும் திருமணத்திற்கும் இடையிலான நேரம் இளம் ஜோடிகளுக்கு எவ்வளவு முக்கியமோ, அதேளவு குடும்பங்களுக்கு முக்கியத்துவமாகிறது. புதியதாக ஏற்படவுள்ள உறவில் இரு தரப்பினரும் மகிழ்ச்சியை அடைய வேண்டும். அதனால் நிச்சயம் தான் ஆகிவிட்டதே என்று மணமக்களும் சரி, குடும்பத்தினரும் சரி வரம்பு மீறி நடந்துவிடக் கூடாது. குறிப்பிட்ட சில விஷயங்கள் எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த வழியில் உறவு திருமணத்தை கடந்து, வாழ்வின் இறுதி வரை நீள வாய்ப்பு உள்ளது. அதனால் நிச்சயதார்த்தம் முடிந்தாலும் திருமணம் வரை செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. அதுகுறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

நீங்கள் நீங்களாக இருங்கள்

Latest Videos

undefined

நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு ஆண்களும் பெண்களும் சந்திப்பது அல்லது பேசுவது வழக்கம். ஒருவரையொருவர் தெரிந்துகொள்ள ஆசைபடுவதால் அவர்கள் சந்திக்கின்றனர். ஆனால் இது பல முறை தொடரும் பட்சத்தில், மணமக்களுக்கு இடையே சண்டை வரலாம். எந்த உறவாக இருந்தாலும் சண்டை வருவது இயல்பு தானே. அதுவும் காதலர்கள் என்றால், தினந்தோறும் சண்டையாகக் கூட இருக்கும். பெரும்பாலும் நாம் நமது துணையை மகிழ்விக்க விரும்பி, நல்லபடியாக நடந்துகொள்வோம். ஆனால் எப்படியிருந்தாலும் சீக்கரமே குட்டு வெளிப்பட்டுவிடும். அப்புறம் சண்டையும் சச்சரவும் தான் மிஞ்சும். அதனால் எப்போதும் நீங்கள் நீங்களாகவே இருங்கள். 

பெண்கள் ஒன்றும் பொருள் இல்லை

திருமணமாவதற்கு முன்பே நிச்சயிக்கப்பட்ட பெண்ணை, மனைவியாக கருதி முதலாளிப் போல நடந்துகொள்ளக் கூடாது. ”அதை செய்”, ”இதை செய்”, ”இப்படித்தான் செய்ய வேண்டும்”, ”அப்படி செய்யக்கூடாது” என்று கட்டளையெல்லாம் போடக்கூடாது. திருமணம் முடிந்துவிட்டாலும் இதையெல்லாம் செய்யக்கூடாது. எல்லோருக்கும் நல்லது, கெட்டது எல்லாம் தெரியும். அவரவர் வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துகொள்வார்கள். வாழ்க்கையில் சரிபாதியை பகிர்ந்துகொள்பவர்கள் தான் தம்பதிகள். மனைவிகள் அடிமைகள் கிடையாது.

உறவில் உரையாடல் இருக்க வேண்டும்

திருமணத்திற்கு முன் நீங்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருந்தால், ஒருவர் மீது ஒருவர் உரிமை எடுத்துக்கொள்ள நேரிடும். நீங்கள் எவ்வளவு அதிகமாக சந்திக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வீர்கள். அதற்கு எப்போதும் சேர்ந்தே இருக்கக்கூடாது. உறவில் அவ்வப்போது ஏற்படும் பிரிவும், இருவருக்குமிடையிலான அன்பை வளர்க்கும். எனவே நிச்சயதார்த்தத்துக்கும் திருமணத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் இருக்கும் உறவை பார்த்துக் கையாளுங்கள். தொலைபேசியில் பேசுவதைக் கட்டுப்படுத்துங்கள். ஒருவரையொருவர் கட்டுப்படுத்த முயற்சிக்காதீர்கள்.

சேர்ந்து ஊர்சுற்றக்கூடாது

பலருக்கு அடிக்கடி மகிழ்ச்சியாக ஊர் சுற்றுவது மிகவும் பிடிக்கும். குறிப்பாக மனதுக்கு பிடித்த துணையுடன் பிடித்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்கிற கனவு பல இளைஞர்களிடம் உண்டு. அதனால் திருமணம் நிச்சயமானவுடன், பலரும் தங்கள் மணமகன் அல்லது மணமகளுடன் ஊர் சுற்றக் கிளம்பி விடுவார்கள். இதுபோன்ற பழக்கம் மணமக்களுக்கு சந்தோஷமாக இருந்தாலும், அவர்களுடைய உறவினர் மற்றும் குடும்பத்தினரிடையே உங்களை தாழ்வாக உணர வைக்கும். அதனால் போனில் பேசுவது போல, அடிக்கடி ஊரெல்லாம் சுற்ற வேண்டும். பிறந்தநாள், மாமனார் மற்றும் மாமியாருக்கு திருமண நாள், தீபாவளி, பொங்கல் போன்று ஏதாவது விசேஷம் என்றால் தாராளமாக போய் வாருங்கள். 

தினமும் இந்த பழத்தை சாப்பிட்டால் புற்றுநோய் வராது, நீரிழிவு பாதிப்பு ஏற்படாது..!!

வீண் செலவுகள் செய்யக்கூடாது

திருமணத்திற்கு முன் மணமக்கள் அதீத உற்சாகத்துடன் இருப்பார்கள். அப்போது ஒருவருக்கொருவர் தொடர்ந்து பரிசுகளை வழங்கத் துவங்குவார்கள். பயணம் என்ற பெயரில் தேவையற்ற பணத்தை செலவிடுகிறார்கள். இது நேரடியாக வீண் செலவு என்கிற கணக்கில் சேர்ந்து விடுகிறது. இதனால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நிதி இழப்பு ஏற்படலாம். பணத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு அதை உங்கள் எதிர்காலத்திற்காக உயர்த்துங்கள். அது உங்களை வருங்கால மாமியார்/ மாமனார் வீட்டில்  உயர்வாக காட்டும்.

உடலுறவில் ஈடுபடுவதை தவிர்த்திடுங்கள்

நிச்சயதார்த்தத்திற்கும் திருமணத்திற்கும் இடையில் போதுமான நேரம் இருக்கும்போது, ​​​​இரண்டு பேர் ஒருவரையொருவர் அதிகம் தெரிந்துகொள்ளும்போதும், உணர்ச்சி ரீதியாக நெருக்கமாக இருக்கும்போதும் உடல் உறவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இது உறவை மேலும் சீர்குலைக்கும். குறிப்பாக, பெண்கள் மீதான தாழ்வான கருத்து உருவாகிவிடும். இப்படி நேர்ந்துவிட்டால், சமூகம் பெண்ணை மட்டுமே குற்றம் சாட்டுகிறது, பையனை முழுமையாக மன்னிக்கிறது. எனவே, திருமணத்திற்கு முன் உடல் உறவைத் தவிர்க்கவும்.

click me!