குளிக்க போனாலே பின்னால வர்றாரு.. அவரோட நிர்வாணமா குளிக்க வெட்கம் வருது.. புலம்பும் வாசகிக்கு நிபுணரின் பதில்

By Ma Riya  |  First Published Feb 25, 2023, 7:43 PM IST

தாம்பத்தியத்தில் வரும் குழப்பங்களை தீர்த்து கொள்வது உறவை பலப்படுத்தும். 


தாம்பத்தியம்  நன்றாக இல்லாமல் போனால் கணவன் மனைவி மனக்கசப்பு அதிகமாகும். வீடு சண்டையும், சச்சரவுமாக அதகளமாக இருக்கும். வீட்டு குழப்பத்தால் அப்படி பாதிக்கப்பட்ட ஒரு வாசகின் கேள்வியை இங்கு காணலாம். 

வாசகியின் கேள்வி: "என் வயது 23. எனக்கு மணமாகி சில மாதங்கள் இருக்கும். தாம்பத்திய வாழ்வில் பிரச்சனை ஏதும் இல்லை. எப்போதும் இருவரும் ஈடுபாட்டுடன் உறவு கொள்வோம். ஆனால் அவர் செய்யும் ஒரே ஒரு விஷயம் கடுப்பாக இருக்கிறது. நான் குளிக்க போனால் பின்னாலே அவரும் வந்துவிடுகிறார். முதலில் அவரும் குளிக்க வருவது எனக்கும் பிடித்தது. ஆனால் இப்போது திருமணமாகி சில மாதங்கள் ஆகிவிட்டது. இந்நேரத்தில் அவர் இப்படி பாத்ரூமுக்குள் வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது. நிர்வாணமாக ஒன்றாக குளிப்பது சில நேரம் சுகப்படவில்லை. அவரிடம் சொன்னால் வருத்தப்படுகிறார். என்னோடு குளிப்பதற்கு அவரும் வருவேன் என்கிறார். எப்படி புரிய வைக்க?" என்பதாக மன பாரத்தை இறக்கி வைத்தார். 

Tap to resize

Latest Videos

undefined

ரிலாக்ஸ் பிளீஸ்..!

நிபுணரின் பதில்: "எந்த உறவிலும் ஆரம்ப காலத்தில் இருக்கும் சில சிற்றின்பங்கள் நாளடைவில் சலிக்க வாய்ப்புண்டு. புதுசுபுதுசான விஷயங்களை மனம் தேடலாம். திருமணமான புதிதில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்யோயமாக இருப்பார்கள். ஒருவருக்கு பிடித்ததை மற்றவர்களும் செய்ய துடிப்பர். அவர்கள் மீதான ஆசையில் அப்படி செய்வார்கள். இந்த கதையை படியுங்கள் புரியும். ஒரு வீட்டில் திருமணமான புதிதில் மனைவி தினமும் காலையில் முளைகட்டிய பயிரை கொடுத்திருக்கிறாள். கணவனும் அதை வாங்கி சாப்பிடிருக்கிறார். இது ஒரு பழக்கமாக மாறிவிட்டது. 

ஆசையே அடிநாதம்

மனைவி மீதான ஆசையில் கணவர் பயிரை உண்ண, கணவன் பிடித்து உண்கிறார் என மனைவி அவருக்கு தினமும் கொடுக்கத் தொடங்கிவிட்டார். ஆண்டுகள் ஓடின. ஒருநாள் மனைவி தன் மகளுக்கு முளைகட்டிய பயிரை காலங்காத்தால கொடுத்திருக்கிறார். கணவன் ஆத்திரத்தில் கொதித்துவிட்டாராம். உன்னை கட்டிய பாவம் நான் தின்கிறேன்; என் பிள்ளைக்கு என்ன? என அவர் கூற மனைவிக்கு அதிர்ச்சியாகிவிட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் அன்பில் இதை செய்து வந்ததாலும், அவர்களுக்குள் போதிய உரையாடல் இல்லை என்பதுதான் இங்கு வெளிப்படுகிறது. 

உங்களுக்கு தனியாக குளிப்பதுதான் விருப்பம் எனில் அதை தெளிவுபடுத்த வேண்டும். தொடக்கத்தில் இந்த உறவுக்குள் நுழையும்போது இருவரும் ஒன்றாக குளிப்பதை நீங்களும் விரும்பி ரசித்திருக்கிறீர்கள். போகபோக அந்த நிர்வாணம் உங்களுக்கு பழகிவிட்டது. நாளடைவில் சலிப்பும் வந்துவிட்டது. ஆனால் உங்கள் கணவர் சேர்ந்து குளியலை அனுபவிப்பது உங்களுக்கு பிரியம் என நினைத்து வருகிறார். உங்கள் குழப்பத்திற்கு ஒன்றுதான் தீர்வு. 

இதையும் படிங்க: பிரசவத்திற்கு பின் தளரும் யோனி.. சிறந்த செக்ஸுக்கு இப்படி பண்ணினால் போதும்..

எளிமையான தீர்வு

நீங்கள் ஒன்றாக இருக்குமோது அவரிடம் அன்பாக உரையாடலை தொடங்குங்கள். இருவரும் ஒன்றாக நீராடுவது சங்கடமாக இருப்பதை பிரியத்துடன் வெளிப்படுத்துங்கள். ஆனாலும் அவர் அதிகமாக அதில் விருப்பம் கொண்டிருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொள்ளுங்கள். திட்டமிட்டு அவ்வப்போது குளியுங்கள். எனக்கு தோன்றவில்லை, உங்கள் மனம் நோக வேண்டாம் என செய்கிறேன் என்பதை சொல்லுங்கள். அதை குறைத்தாலும் உடலுறவில் அதிக நேரம் அவருடன் மகிழ்ச்சியாக இருங்கள். அவருடன் குளியலறையில் மட்டுமில்லை, மற்ற இடங்களில் இணைந்திருப்பதை அதிகமாக விரும்புவதை வெளிப்படுத்துங்கள். புரிந்துகொள்வார். 

இதையும் படிங்க: மார்பகங்களை வைத்து வெயிட்டான பொருள்களை.. அலேக்கா தூக்கும் பெண்கள்.. ஷாக்கிங் போட்டோஸ் உள்ளே..!

click me!