மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருதய நலனில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் மனநிலை சார்ந்த பிரச்னைகளை என்றும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
நீங்கள் விரும்பும் நபர் எப்போதும் உங்களுடன் இருக்கும்போது உங்கள் இதயம் வேகமாக துடிக்கிறதா? உங்கள் காதலை அல்லது நீங்கள் விரும்பும் நபரை சந்திக்கும் போது உங்களையே நீங்கள் மறந்து விடுகிறீர்களா? இதுபோன்ற உணர்வுகள், உங்களுடைய இருதயத்துக்கு உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியை தருகிறது. இது உங்களுடைய இருதய ஆரோக்கியத்துக்கும் நன்மை சேர்க்கிறது. எப்போதுமே அன்பும் காதலும் உடல்நலனுக்கு நன்மை பயக்கிறது. அதற்கு அமைதி மற்றும் ஆறுதல் பெறுவதன் மூலம், உங்கள் இரத்த அழுத்தம் சிறப்பாக இருப்பதே காரணமாக அமைகிறது. அந்த உறவில் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், நீங்கள் நிம்மதியாக இருந்தால், இது உங்கள் இரத்த அழுத்தத்தை நன்றாக வைத்திருக்கும்.
காதல் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு நன்மை பயக்கும்?
undefined
நாம் ஒருவரை நேசிக்கும்போது, நமது உடலும் மனமும் பூரிப்பு அடைகிறது. அதனால் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் சக்தி அன்புக்கு உள்ளது. உங்களுக்கு ஏற்கனவே இருதய பாதிப்புகள் இருந்தால், அதை அன்பு சரிசெய்துவிடும். திருமணமாகாதவர்களை விட திருமணமானவர்கள் நோய்களில் இருந்து குணமடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்கு துணையிடம் இருந்து வெளிப்படும் அன்பு தான் காரணம்.
ஆண்களுக்கு தான் வாய்ப்பு அதிகம்
பெண்களை விட ஆண்களின் இதய ஆரோக்கியத்திற்கு திருமணம் நன்மை சேர்ப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தாம்பத்தியத்தில் மகிழ்ச்சியாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம். திருமண வாழ்க்கையில் உங்களை நேசிக்கும், உங்களை கவனித்துக்கொள்பவர் மற்றும் உங்கள் மீது அக்கறை கொண்ட ஒருவர் இருப்பதே இதற்குக் காரணம். அதனால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம்.
காதல் முறிவு ஏற்பட்டால், என்ன நடக்கும்?
நீங்கள் ஒருவரை நேசித்தால், அந்த அன்பு உங்களுடைய ஆரோக்கியத்துக்கு பல்வேறு நன்மைகளை சேர்க்கிறது அதே நேரத்தில், இதய துடிப்பு அல்லது முறிவு உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். மக்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அல்லது மோசமான செய்தி கிடைத்தால் அதிர்ச்சியடையும் திரைப்படங்களை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். நிஜ வாழ்க்கையிலும் இப்படி ஒரு நிலை வரலாம். அதனால் உங்களை எப்போதும் மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்வது மிகவும் நல்லது.
இருதய நலன் காக்கும் இதய வடிவிலான ஸ்ட்ராபெர்ரி பழங்கள்..!!
நொறுங்கிப் போன இருதயம் என்றால் என்ன?
ஆங்கிலத்தில் broken heart syndrome என்று குறிப்பிடப்படக் கூடிய நிலை தான் நொறுங்கிப் போன இருதயம். இதுவொரு மீளக்கூடிய நிலை தான். ஆனால் பலரது இதயங்கள் இந்த பிரச்சனையால் என்றென்றும் நோய்வாய்ப்பட்டிருக்கும். நொறுங்கிப் போன இருதயம் என்பது நிஜமான மருத்துவக் கோளாறாகும். இதில் இதயம் திடீரென அளவு அதிகரித்து ரத்தத்தை சரியாக பம்ப் செய்ய முடியாமல் போகும்.
ரத்த அழுத்தத்தில் பிரச்னை இருந்தால், அதை ஒரீரு நாட்களுக்குள் சரி செய்துவிடலாம். அதிகப்பட்சமாக உடல்நிலை பொறுத்து ஒரு மாத காலம் வரை தேவைப்படுகிறது. நொறுங்கிப் போன இருதயம் தொடர்பான பிரச்னை பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது. இது மிகவும் அரிதான நோயாக வகைப்படுத்தப்பட்டாலும், சிறிது ஆபத்தானது என்று மருத்துவ ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.