கன்னித்தன்மை இழந்தவுடன் உடல் சந்திக்கும் மாற்றங்கள் இவைதான்..!!

By Asianet Tamil  |  First Published Feb 17, 2023, 11:03 PM IST

ஆணுக்கும் பெண்ணுக்கும் கன்னித்தன்மை பொதுவானது தான் என்றாலும், பெரும்பாலும் அது பெண்களுடைய நடத்தைக்கு மட்டும் உவமையாக சொல்லபடுகிறது. ஆனால் இதை அறிவியல் ரீதியாக அணுகலாம்.
 


பெண்களின் பிறப்புறுப்பில் ஹைமன் என்கிற திசு இருக்கும். இதை முதன்முதலாக உடலுறவு கொள்ளும் போது கிழிந்திவிடும். ஒரு திரை போன்ற திசுவை தான் பெண்ணின் கன்னித்தன்மை அளவிடப்படுகிறது. ஆனால் இது உடலுறவின் போது மட்டுமின்றி பல்வேறு சமயங்களில் தானாகவே கிழந்துவிடும். உடலுழைப்பை அதிகமாக நாடும் வேலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு ஹைமன் திசு இயற்கையாகவே கிழிந்துபோகும். தையல் வேலையில் ஈடுபடும் பெண்கள், விளையாட்டு வீராங்கனைகள், சைக்கிள் ஓட்டும் பெண்கள் போன்றோருக்கு ஹைமன் திசு இயற்கையாகவே கிழிந்துபோகும். எனவே பெண்களுக்கு பெரும் அழுத்தமாக இருக்கும் இந்நிகழ்வு குறித்து அறிவியல் பூர்வமான அம்சங்களுடன் தெரிந்துகொள்வோம்.

ஹார்மோன் உணர்திறன் பெறும்

Tap to resize

Latest Videos

undefined

முதன்முதலாக உடலுறவின் போது ஹைமன் திரை கிழிந்தால், பெண்களின் உடலில் இருக்கும் அனைத்து ஹார்மோன்களும் மேலும் உணர்திறன் பெறும். இதனால் பெண்களுக்கு மேலும் பாலியல் ரீதியான உணர்வுகள் வலுபெறும். அதுதவிர, உடலமைப்பில் எந்தவிதமான பிரச்னைகளும் உருவாகாது. மனதளவில் ஏற்படக்கூடிய மாற்றம் என்று குறிப்பிட வேண்டுமானால், ஹைமன் திசு கிழிந்ததும் மனம் தெளிவு பெறும்.

உணர்வுகள் அலைபாயும்

முதன்முறையாக உடலுறவு கொண்டதும், பெண்களுக்கு அந்த நபருடன் அதிகளவில் காதல் உணர்வு தோன்றும். திருமணத்துக்கு பிறகு  உடலுறவு கொள்வது வேறு. ஆனால் திருமணத்துக்கு முன்பு இருவருடைய ஒப்புதலுடன் உடலுறவு ஏற்படும் போது, இதுபோன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வது அதிகம். இது அப்போதைக்கு தோன்றும் உணர்வு தான். அப்படியே நிலைத்திருக்கும் என்று கூறிவிட முடியாது. உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள், ஆனால் அதே சமயத்தில் நிலை சார்ந்த புரிதலும் இருக்க வேண்டும்.

காதல் ஹார்மோன்

ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலுறவு ஏற்படும் போது, அது அவர்களுக்கிடையில் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மனதுக்குள் ஆசை, மகிழ்ச்சி போன்ற உணர்வுகள் அதிகரிக்கும். அதன்வாயிலாக ஆக்சிடாக்சின் என்கிற ஹார்மோன்கள் உடலில் இருந்து வெளியாகும். இதுவொரு காதல் ஹார்மோனாகும். மேலும் இதனால் காதல் ஆசை மனதுக்குள் எட்டிப்பார்க்கும். இது மிகவும் இயல்பானது தான். ஆனால் அதேசமயத்தில் கலவிக்கு பிறகு காதல் உணர்வு அனைவருக்கும் உருவாகும் என்றும் கூறிவிட முடியாது.

விசித்திரமான உணர்வுகள்

ஒருவருக்குள் காதல் வந்தால் மட்டுமல்ல, அவருக்கு முதன்முதலாக பாலியல் இன்பம் கிடைத்தாலும் பலவிதமான உணர்வுகள் தோன்ற ஆரம்பிக்கும். பல பெண்களுக்கும் தங்களுடைய ஹைமன் திசு கிழியும் உணர்வு தெரியும். அதனால் உடலுக்குள் ஏதோ பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாக அவர்கள் அச்சம் கொள்வார்கள். ஆனால் அப்படி எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. கன்னித்தன்மையை இழப்பது பெரிய குற்றமல்ல, அது உங்களுடைய விருப்பத்தின் வெளிப்பாடு மற்றும் இயற்கையான நிகழ்வு. அவ்வளவு தான்.

உடலுறவு முடிந்தவுடன் பெண்கள் செய்யவேண்டிய 5 செயல்கள்..!!

மனரீதியாக தைரியம் வேண்டும்

உடலுறவு ஏற்படும் போது சரி, அது முடிந்தவுடன் சரி, உங்களுடைய நிகழ்கால வாழ்க்கையை எதிர்கொள்ள மனரீதியாக நீங்கள் தயாராக இருக்க வேண்டும். முதன்முறையாக உடலுறவு ஏற்படும் போது ஒருவிதமான பதட்டம், குழப்பம் மற்றும் சந்தேகங்கள் இருக்கலாம். அதனால் எப்போதும் மனநிலையை திடமுடன் வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை உடலுறவு கொள்வதில் உங்களுக்கு தயக்கமிருந்தால், எதுவும் செய்ய வேண்டும். உடலையும் மனதையும் உறுதியான பிறகு நீங்கள் காதல் செயல் புரியலாம்.

click me!