'மைத்துனரை காதலிச்சேன்.. அவருக்குனு மனைவி வந்த அப்புறம் மாறிட்டாரு..' முக்கோண காதலுக்கு நிபுணரின் பதில்

By Ma Riya  |  First Published Feb 17, 2023, 2:57 PM IST

திருமணத்தை மீறிய உறவுகள் வாழ்க்கையில் பல சிக்கல்களை உண்டுபண்ணுகிறது. 


கணவன், மனைவிக்கு இடையில் உறவு திருப்திகரமானதாக இல்லாதபோது, மூன்றாம் நபர்கள் அந்த உறவுக்குள் நுழைகிறார்கள். அது விரும்பியோ விரும்பாமலோ சிலர் வாழ்வில் தொடர்கதையாகிவிடுகிறது. ஆனால் அதிலும் உணர்வுச்சிக்கல், பொசசிவ் போன்ற பிரச்சனைகள் தலைதூக்குகின்றன. அப்படியான பிரச்சனையை குறித்து இங்கு காணலாம். 

வாசகியின் கேள்வி:"எனது கணவருக்கு இருந்த இயலாமைகளால், திருமணமான சிலகாலத்திலே எனது மைத்துனர் மீது எனக்கு ஈர்ப்பு வந்தது. சாதாரண திருமணமான தம்பதிகளுக்குள் இருக்கும் அன்பும் அக்கறையும் கூட இதில் இல்லை. அதனால் தான் என்னவோ மைத்துனருடன் காதல் ஏற்பட்டது. நானும் மைத்துனரும் 3 ஆண்டுகள் உறவில் இருந்தோம். அண்மையில் அவர் திருமணம் செய்து கொண்டார். 

Tap to resize

Latest Videos

undefined

உடைந்து போன நம்பிக்கை

அதற்கு பிறகு எங்களுக்குள் பிரச்னை வர தொடங்கியது. நான் அவருக்கு நம்பிக்கைக்குரியவளாக இருக்கிறேன், ஆனால் புது மனைவி வந்த பிறகு என் மைத்துனர் என்னிடம் பொய் சொல்ல தொடங்கிவிட்டார். என்னை மட்டுமே காதலிப்பதாகவும், தன் மனைவியை பிடிக்கவில்லை என்றும் என்னிடம் கூறுகிறார். ஆனால் திருமணத்திற்கு பிறகு எனக்கு அதிக நேரம் கொடுக்காமல் தவிர்க்கிறார். அவரது பொய்களால் எங்களுக்குள் நிறைய சண்டைகள் வருகின்றன. 

இதனால் எங்கள் உறவில் இருந்த நம்பிக்கை உடைந்துவிட்டது. நான் இந்த உறவை விட்டு விலக முடிவு செய்யும் போதெல்லாம்,  அவர் வலிய வந்து ஒட்டிக் கொள்கிறார். நான் இந்த உறவை என்ன செய்ய வேண்டும்? நான் என் மைத்துனரை ரொம்ப நேசிக்கிறேன். அவரை விட்டுத் தரமுடியவில்லை. இதை எப்படி சமாளிப்பது?" என்ற வாசகியின் கேள்விக்கு மருத்துவர் பதிலளிக்கிறார். 

நிபுணரின் பதில்: இதை எங்களுடன் பகிர்ந்தற்கு நன்றி. இது சிக்கலான சூழ்நிலை என புரிந்து கொள்ளமுடிகிறது. இதனால் நீங்கள் எவ்வளவு மனம் உடைந்திருப்பீர்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் ஒருவிஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் இருவருக்கும் தனித்தனி வாழ்க்கைத் துணை இருக்கின்றனர். இருவருக்கும் வெவ்வேறு வாழ்க்கை விதிக்கப்பட்டுள்ளது. 

உங்களுக்கு ஒரு கணவர் இருக்கிறார், உங்கள் மைத்துனருக்கு ஒரு மனைவி இருக்கிறார். இந்த மாதிரி சூழ்நிலையில் இந்த உறவை அப்படியே வைத்திருப்பது இருவருக்கும் சிக்கல், அது மட்டுமல்லாமல் விளைவுகளும் பேரழிவை ஏற்படுத்தும். இது உங்களுக்குத் தெரியும் என நம்புகிறேன். முழுகுடும்பமும் அனுபவிக்க வேண்டிய ஒரு பேரழிவாக உங்கள் உறவு மாறலாம். 

முக்கோண காதல் 

ஆனால் உங்களுடைய மைத்துனர் பொய் கூறுகிறார் என நீங்கள் சொல்வது, அவருக்கு மனைவி மீது அபிப்ராயம் இருப்பதை காட்டுகிறது. அவர் மனைவிக்கும் முக்கியத்துவம் கொடுக்க நினைத்தால் உங்களுக்குள் இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் தொடரலாம். மனைவியை விட்டு வர சொன்னால் அவரால் வரமுடியுமா? என்பதை சிந்தித்து பாருங்கள். இது தொடர்ந்தால் நீங்கள் மட்டுமின்றி, அவரும் வருந்தலாம். 

நீங்கள் அவருக்காக உறுதியாக இருக்கிறீர்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் நிகழ்காலத்தில் இந்த உறவு என்னமாதிரி இருக்கிறது என்பதை அவருக்கும் தெரியப்படுத்துங்கள். இந்த உறவு தற்போது எப்படி நச்சுத்தன்மையுடையதாக மாறியது என்பதை குறித்து பேசுங்கள். இந்த உறவு எப்படி உங்கள் முழு குடும்பத்தின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்பதை உங்களுடைய மைத்துனருக்கு தெரியப்படுத்துங்கள்.

உங்களால் மைத்துனரை விட்டுக் கொடுக்கமுடியாவிட்டால், தைரியமாக ஒரு முடிவை எடுக்கவேண்டும். நீண்ட காலத்திற்கு நீங்கள் இந்த உறவை மறைக்க முடியாது. நீங்கள் இருவரும் முற்றிலும் இந்த உறவில் அர்ப்பணிப்புடன் இருந்தால், ஒரு நிலைப்பாட்டை எடுத்து இந்த உறவுக்கு பெயர் கொடுங்கள். அதற்கென முயற்சி எடுத்து வெளிப்படையாக சட்டப்பூர்வமாக நடவடிக்கை மூலம் இணையலாம். அதை தக்கவைத்து கொள்ளலாம். நீங்கள் உறவில் உறுதியாக இருந்தால் எவ்வளவு கடினமான முடிவுகளையும் எடுக்க முடியும். மேலும் இது குறித்து தெளிவு பெற அனுபவம் வாய்ந்த ஆலோசகரை அணுகி பேசுங்கள். 

இதையும் படிங்க: கணவரோட அம்மாகிட்ட எங்க செக்ஸ் வாழ்க்கை பத்தி சொல்றது தப்புதான... குழம்பிய இளம்பெண்ணுக்கு நிபுணரின் தீர்வு..

இதையும் படிங்க: திருமணமான பெண்களுக்கு 'இன்னொரு ஆண்' மேல ஆர்வம் இருந்தா இப்படி தான் நடந்துப்பாங்களாம் தெரியுமா?

click me!