கணவன் மனைவி குழப்பங்களை தீர்த்து கொள்வது உறவை பலப்படுத்தும்.
கணவன் மனைவி உறவில் ஒளிவு மறைவு இருக்கக் கூடாது. ஆனால் மூன்றாம் நபர்களின் தலையீடு கணவன், மனைவி உறவுக்குள் வரக்கூடாது என பெரும்பாலானோர் நினைக்கின்றனர். அது ஓரளவு சரியானதுதான். அதற்கு எந்த அளவு எல்லை உள்ளது. இளம்பெண் ஒருவரின் குழப்பத்தையும், நிபுணரின் பதிலையும் தெரிந்து கொள்வோம்.
கேள்வி இதுதான்: "எனக்கு 23 வயது. முதுகலைப் படிப்பை முடித்தவள். பெற்றோரின் வற்புறுத்தலால்தான் மணம் முடித்தேன். திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு என் கணவரை இரண்டு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன். அவர் மிகவும் பழமைவாதம் கொண்டவர். ஆனால் அவருக்கு வசதியான குடும்பம். எங்கள் இருவருக்கும் திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இன்னும் முறையாக தாம்பத்தியம் கொள்ளவில்லை. முதல் முறையாக உடலுறவு கொள்ள முயன்றபோது, எனக்கு பயமாக இருந்தது. அப்போது எனக்கு வேதனையாகவும் இருந்தது. அதனால் கணவரை விலக்கிவிட்டேன். எனது நல்ல நேரம், அவருக்கு புரிதல் இருந்ததும் பொறுமையாக விலகிவிட்டார். கனிவான நபர் போல் தெரிந்தார்.
தொடர்ந்து நாங்கள் பலமுறை முயற்சித்தாலும், எங்களால் முழுவதுமான உடலுறவு கொள்ள முடியவில்லை. இதற்கிடையே ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. என் மாமியார் என்னிடம் பேச வேண்டும் என தனியாக அழைத்தார். அப்போது இரவில் நான் இன்னும் ஒத்துழைக்க வேண்டும், அப்போதுதான் உடலுறவு கொள்ள முடியும் என ஆலோசனை வழங்கினார். உடலுறவு கொள்வது எப்படி என்பது குறித்தும் தேவையில்லாத ஆலோசனைகளையும் அள்ளி வீசினார். அந்த சமயங்களில் வலியைக் குறைக்க லூப்ரிகன்ட் கொடுத்தார். என் கணவர் அவரது தாயுடன் எங்கள் பாலியல் வாழ்க்கையை குறித்து பேசியது தெரிந்ததும் எனக்கு கூசியது. நான் மிகவும் வேதனையாக உணர்ந்தேன். ஏன் அப்படிச் செய்தார் என அவரிடம் கேட்டபோது, அவர் என்னையே மீண்டும் கண்டித்தார்.
சில தினங்களுக்கு பிறகு, அவர் நல்ல மனநிலையில் இருந்த சமயத்தில், இனிமேல் என் மாமியாருடன் பாலியல் வாழ்க்கையை குறித்து விவாதிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர் தனது சகோதரர்கள் கூட தன் அம்மாவிடம் தான் கூறுகிறார்கள் என தெரிவித்தார். தன்னுடைய அண்ணிகளும் என்னைப் போலவே வலியை அனுபவித்திருக்கிறார்கள் என்றும் நான் ஒரு சிறிய வலியைப் பொறுத்துக்கொள்ள முயற்சிக்காதது முழுக்க என் தவறு என்றும் பதிலளித்துவிட்டு அமர்ந்தார்.
உடலுறவு வெறுமனே உடல் சார்ந்தது மட்டும் அல்ல. மனமும் முக்கியம். என் கணவருடைய அம்மா, அண்ணன், தம்பிகள் எங்கள் வாழ்க்கையில் தலையிடுவதால், என் மனநிலை பாதிக்கிறது. என்னால் உடலுறவில் ஈடுபட முடியவில்லை. இதை சொன்னால் என் கணவர் கோபமடைகிறார். கணவனை திருப்தியாக வைப்பது மனைவியின் கடமை என்றும், நான் அவ்வாறு செய்யத் தவறியதால், எனக்கு விவாகரத்து தருவதாகவும் கூறி மிரட்டுகிறார். எனக்கு மன அழுத்தமாக உள்ளது. அவர் தனது தாயுடன் எங்கள் செக்ஸ் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறார் என்ற எண்ணம் என்னை ஆட்டிப்படைக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும்" என வாசகி கேட்ட கேள்விக்கு நிபுணர் அளிக்கும் பதிலை தெரிந்து கொள்ளுங்கள்.
நிபுணரின் பதில்: அன்புள்ள வாசகியே, உடலுறவுக்கு முன் அல்லது உடலுறவில் ஈடுபடும் போது பெண்கள் அனுபவிக்கும் தொடர்ச்சியான வலி பொதுவானதுதான். டிஸ்பரூனியா போன்ற பாலியல் வலி பிரச்சனைகள் சில பெண்களுக்கு ஏற்படுகிறது. இது சில சமயங்களில் உடலுறவு மீது பயம், நிராகரிப்பு போன்றவைக்கு வாய்ப்பாக அமையும். ஐந்து பெண்களில் ஒருவருக்கு இந்த பாதிப்பு வரலாம்.
இதற்கு உடலுறவின்போது யோனியில் லூப்ரிகேட்டிங் ஜெல்லியை பயன்படுத்தலாம். இது தொடர்பாக மகளிர் மருத்துவ நிபுணரின் ஆலோசனையை பெறுங்கள். இது பெண்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை என்பதால் சிகிச்சை எடுத்து கொள்ள வாய்ப்புகள் நிறைய உண்டு.
உங்கள் கணவரின் செயலால் உங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியம், விரக்தி, காயம் ஆகியவை புரிந்து கொள்ளத்தக்கது. நீங்கள் அனுபவிக்கும் துயரத்தை குறித்து தெரியப்படுத்த சில முயற்சிகளை செய்துள்ளீர்கள். பழமைவாத கூட்டுக்குடும்பங்களில், வாழ்க்கைத் துணைவர்களுக்கிடையில் இருக்கும் பிரைவசி கூட அரிதாகவே மதிக்கப்படுகிறது. அங்கு இதுமாதிரியான குறுக்கீடுகள் நடக்கக் கூடியவை.
கணவன்-மனைவிக்கு இடையே இருக்கும் தனியுரிமையின் (privacy) அவசியத்தை புரிய வைக்கும் முயற்சியில் நீங்கள் மனம் தளராமல் ஈடுபடுங்கள். நம்பகமான ஒருவர் அல்லது உங்கள் துணை யார் பேச்சை கேட்பாரோ அவரிடம் இந்த பிரச்சனைக்கு உதவியை நாடுங்கள். உங்கள் மனவோட்டத்தை புரிந்துகொள்ளவும், ஒன்றாக வாழ வழியைக் கண்டறியவும் ஆலோசனைகளை மகப்பேறு மருத்துவர் அல்லது தம்பதியரின் ஆலோசகரிடம் பெறுங்கள்.
உங்கள் குழப்பம் நியாயமானது தான். ஆனால் குடும்ப சூழலை புரிந்து கணவரிடம் பேசுவது தான் பலனளிக்கும். இல்லையெனில் நீங்கள் குடும்பத்தை புறக்கணிப்பதாக நினைத்து கொள்வார். அதுதான் பிரச்சனைக்கு ஆணிவேர். அதை புரிந்து செயல்படுங்கள்.
இதையும் படிங்க: திருமணமான பெண்களுக்கு 'இன்னொரு ஆண்' மேல ஆர்வம் இருந்தா இப்படி தான் நடந்துப்பாங்களாம் தெரியுமா?
இதையும் படிங்க: இஷ்டத்துக்கு கணவனை மாற்றி கொள்ளும் பெண்கள்.. இந்த நாட்டில் பெண்களுக்கு வேற லெவல் சுதந்திரம் இருக்கு தெரியுமா?