காதலில் நல்ல விஷயங்கள் நடக்கும் போது, எப்படி அறிகுறிகள் தென்படுமோ; அதேபோன்று தீயவை ஏதேனும் நடைபெறுவதாக இருந்தால், அதற்கும் அறிகுறிகள் தோன்றும்.
காதல் உறவு என்பது திருமணத்தில் முடிந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே. ஆனால் அது பிரேக்-அப்பாக அமைந்தால் சோகமும் விரக்தியும் தான் மிஞ்சும். காதல் உணர்வுகள் அதிகமாக இருக்கும் போது, அதனுடைய பாதிப்புகளை அளவீடு செய்வதை நம்மில் பலர் மறந்துவிடுகிறோம். இதுதொடர்பாக முன்கூட்டியே கணித்தாலும் எந்த பயனும் கிடைக்காது. ஒருவருடன் நெருங்கிப் பழகும் போது தான், பிரச்னையே நமக்கு தெரியவரும். ஆனால் அப்போது அந்த நபர் மீது நாம் அதிகமாக அன்பு வைத்திருப்போம். அதனால் பிரச்னை கண்ணை மறைத்துவிடும். பிறகு காதல் முறிவுக்கு அந்த பிரச்னையே காரணமாகிவிடும். இவ்வாறு காதல் முறிவு ஏற்படுவதற்கு பல்வேறு அறிகுறிகள் உள்ளன. அதில் குறிப்பிட்ட 4 அறிகுறிகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
போக போக திகட்டுவது
காதலிக்க துவங்கிய புதிதில் இருவரும் திருமணம், வேலை, வாழ்விடம், குழந்தைகள் வரை பேசிக்கொள்வார்கள். ஆனால் அந்த காதல் சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் நீடித்த பிறகு, இருவருக்குமிடையேயான எதிர்காலம் சார்ந்த பேச்சுக்கள் குறையத் தொடங்கும். இதை கவனிக்கும் பெண், காதலனுடன் சண்டைக்கு போவார். இதன்மூலம் விரிசல் வளர்ந்து, நாளிடைவில் அது பிணக்கமாக மாறிவிடும். சண்டைக்கு முன்பு வரை அவ்வப்போது டேட்டிங் சென்றவர்கள். சண்டை வந்ததும் பார்த்து பேசலாம் என்று அழைத்தாலும் வரமாட்டார்கள். இதுபோன்ற நடவடிக்கை பிரேக்-அப்பில் தான் முடியும். இந்த அறிகுறி தோன்றியதும் உடனடியாக காதலனை கட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.
திருமணமே ஆகாது
காதலிக்கும் புதியதில் அவ்வப்போது திருமணம் குறித்து காதலர்கள் நிறைய பேசுவார்கள். ஆனால் நாட்கள் கடந்ததும் திருமண வாழ்க்கைக்குள் நுழைவதை உலக சாதனையாக கருத தொடங்கிவிடுவார்கள். பெரும்பாலும் இதுபோன்ற பிரச்னைகள் ஆண்களிடம் தான் அதிகம் உள்ளன. காதலி பலமுறை நிர்பந்தம் செய்தும், காதலன் திருமணத்தை உறுதி செய்யமாட்டார்கள். மேலும் அந்த உறவை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான எந்த முயற்சியும் ஆண்களிடத்தில் இருக்காது. இந்த அறிகுறியை புரிந்துகொள்ளும் பெண்கள் அல்லது ஆண்கள், அடுத்தக்கட்டத்தை நோக்கிய நகர்வை உடனடியாக முடிவு செய்ய வேண்டும்.
எதற்கெடுத்தாலும் சாக்கு
துவங்க காலங்களில் உருகி உருகி காதலிக்கும் காதலர்கள், நாட்கள் செல்ல செல்ல காரணங்களை முன்வைத்து வாழுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு காதலன்/காதலியை சந்திக்க நேரமிருக்காது, பேச நேரமிருக்காது, குறுந்தகவல் கூட எதுவும் வராது. இரண்டுபேரில் யாராவது பிரச்னையை உணர்ந்து, ஏன்? என்று கேட்டால் சாக்கு சொல்வார்கள். இதன்காரணமாக காதலர்களுக்கு இடையில் ஒரு உணர்வுபூர்வமாக உரையாடல் எதுவுமே இல்லாமல் போய்விடும். கடைசியில் சந்திக்க வாய்ப்பில்லாமல், காதல் முறிவு ஏற்பட்டுவிடும்.
பேசாமல் இருப்பது
பலருக்கும் காதல் என்பது ஒரு கொண்டாட்டத்தின் வடிவமாகும். தங்களால் தங்களுடைய பெற்றோர், நண்பரிடத்தில் பகிர்ந்துகொள்ள முடியாத செய்திகளை காதலன் / காதலி இடத்தில் பகிர்ந்துகொள்வார்கள். அதீத சந்தோஷம், தாங்க முடியாத வேதனை உள்ளிட்ட அனைத்து விதமான உணர்வுகளும் அடங்கும். இது ஆரம்பக் காலத்தில் மட்டும் தான். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, இது சலிப்பை தந்துவிடும். இது நாளிடைவில் இருவருக்குமிடையில் விலகலை உருவாக்கிவிடும்.
கன்னித்தன்மை இழந்தவுடன் உடல் சந்திக்கும் மாற்றங்கள் இவைதான்..!!
என்ன செய்யலாம்?
காதலில் சலிப்பு என்று உருவாகிவிட்டால், அதை சரிசெய்வது கடினம் தான். இது முடிவில் பிரேக்-அப்புக்கு தான் வழிவகுக்கும். காதலர்களுக்கு இடையில் தொடர்பின்றி போகும் போது பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. ஆனால் இதை பேசி சரிசெய்பவர்கள் குறைவு தான். அதற்கு, காதலில் இருப்பதால் அந்த உறவை எப்போது வேண்டுமானாலும் துண்டித்துக் கொள்ளலாம் என்கிற மனநிலை நிலவுதான் காரணமாகும். இதனால் எந்தவொரு பிரச்னையையும் பேசி முடிக்காமல், சண்டைப் போட்டு வளர்த்துக் கொண்டே போவார்கள். எப்போதும் உறவு சார்ந்த சிக்கல்களை பேசிவிட்டாலே போதும், பாதி பிரச்னை தீர்ந்துவிடும்.