கணவரிடம் திருப்தியில்லை.. இப்போ முன்னாள் காதலனுடன் பேசுவது தவறா? வாசகிக்கு நிபுணர் அட்வைஸ்

By Ma Riya  |  First Published Mar 1, 2023, 7:02 PM IST

கணவரிடம் திருப்தியில்லாததால் முன்னாள் காதலனிடம் பேசும் வாசகிக்கு பதில்.. 


வாசகியின் கேள்வி: "என் கணவர் என்னோடு நேரம் செலவிடுவதில்லை. இப்போது நான் எனது முன்னாள் நபருடன் தொடர்பு கொண்டேன் பேசுகிறேன். என் கணவர் தன்னுடைய பணிகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார். என் முன்னாள் காதலன் எப்போதும் எனக்கு ஆதரவாக இருக்கிறார். நான் அவரை இப்போதும் அதிகம் சார்ந்திருக்கிறேன். அவரோடான என் உறவை முடிக்க விரும்பவில்லை, அதே நேரம் என் கணவரிடம் பொய் சொல்வதும் எனக்கு பிடிக்கவில்லை. நான் என்ன செய்வது?"என முடித்திருக்கிறார்.  

நிபுணரின் பதில்: "எங்களுடன் இந்த குழப்பத்தை பகிர்ந்ததற்கு நன்றி. உங்கள் கணவரை விட உங்கள் முன்னாள் காதலருடன் அதிக நேரம் செலவிடும் சூழ்நிலையில், அதை இருதரப்பினருடனும் நேர்மையாக உரையாடுவது முக்கியம். இருவருடனும் ஆரோக்கியமான உறவைப் பேணுவது சாத்தியம் தான். அதற்கு ஆனால் கொஞ்சம் சமரசம் தேவைப்படும். உங்கள் கவலைகளைப் குறித்து உங்கள் கணவரிடம் முதலில் பேசுங்கள். 

Tap to resize

Latest Videos

undefined

உறவில் சமரசம்

அவருடன் உங்களுக்கு அதிகமான நேரம் தேவை என்பதை சொல்லி புரியவையுங்கள். உங்கள் கணவருக்கு நீங்கள் இன்னும் உண்மையாக இருக்கிறீர்கள் என்பதை முன்னாள் காதலரிடம் சொல்லுங்கள். கணவருடன் வாழ்வதை குறித்து உங்கள் முன்னாள் காதலரிடம் விளக்கி, உங்கள் முடிவை மதிக்கும்படி கேளுங்கள். முன்னாள் காதலன் உங்களுக்கு ஆதரவாக இருப்பதை நீங்கள் புகழ்ந்தாலும், திருமண உறவில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் உங்கள் கேள்வி கணவனுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது. 

இருதரப்பினரும் ஒருபுரிதலோடு இணைந்து செயல்படத் தயாராக இருந்தால், நீங்கள் விரும்பினால், இருவருடனும் உங்களால் நேர்மையாக பேச முடியும். இருதரப்பினரும் அதை புரிந்து கொள்ளவில்லை என்றால், இந்த இரு உறவுகளில் ஒன்றை முடிவுக்குக் கொண்டுவருவது அவசியப்படலாம். உங்களுடனான உறவில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்பதை அவரிடம் சொல்லியாக வேண்டும். அவருடைய வேலை உங்கள் உறவை எந்தளவு பாதிக்கிறது என்பதை அவர் அறியாமல் இருக்கலாம். அதை அவருக்கு வெளிப்படுத்துங்கள். 

கணவனிடம் திருப்தியில்லை..! 

கணவருடன் நேரம் செலவிடுவது மனைவிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அவர் அறிந்திருந்தால் மாற்றங்களைச் செய்யத் தயாராக இருப்பார். எப்படி ஒன்றாக அதிக நேரம் செலவிடுவது என்பது குறித்து உங்களால் இருவராலும் ஒரு முடிவுக்கு வர முடியாவிட்டால், அவசியம் உறவு ஆலோசகர் உதவியை நாடவேண்டும். உங்களுடைய முன்னாள் காதலரை பொறுத்தவரை, அவருடன் எதற்காக தொடர்பில் இருக்கிறீர்கள்? அவரிம் உங்கள் தேவைகள் என்ன என்பதைக் கருத்தில் கொள்வது அவசியம். 

கணவனா? காதலனா? 

உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியடையாததால் அவரை பயன்படுத்துகிறீர்கள் என்றால், அது உங்கள் இருவருக்கும் பொருந்தாது. உங்கள் முன்னாள் காதலருடன் உணர்வுரீதியாக நீங்கள் தொடர்பில் இருந்தால், உங்கள் திருமண வாழ்க்கையில் மீண்டும் கவனம் செலுத்த அவருடன் இருக்கும் தொடர்பை முடிக்க வேண்டியிருக்கலாம். ஏனெனில் முன்னாள் காதலனை மனதில் முதன்மைப்படுத்திவிட்டு கணவரோடு நெருக்கம் காட்டமுடியாது. 

நேர்மை முக்கியம் 

உங்கள் கணவர், முன்னாள் காதலன் இருவரிடமும் உங்கள் உணர்வுகளைப் பற்றி நேர்மையாக இருங்கள். எப்போதும் உங்களுடைய சூழ்நிலைக்காக பொய் சொல்வது எதிர்காலத்தில் உங்கள் அனைவருக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். முதலில் முன்னாள் காதலனை தொடர்பு கொள்ள உங்களைத் தூண்டிய முக்கிய சிக்கல்களைத் தீர்க்கவும். உங்கள் திருமண உறவை சிறப்பாக மாற்ற நீங்களும் உங்கள் கணவரும் உழைக்க வேண்டியது அவசியம். உங்கள் கணவர் நிலைமையை புரிந்து கொண்டால் அவரை அழுத்தத்திற்கு உள்ளாக்காதீர்கள். முன்னாள் காதலரின் நட்பு உங்கள் கணவருடனான உறவை பாதிக்கவில்லை என்பதை அவருக்கு புரியவையுங்கள். 

இதையும் படிங்க: உடலுறவின்போது இந்த இடங்களை தொடும் ஆண்களுக்கு.. பெண்கள் அடிமையாகிவிடுவார்களாம்.. ஏன் தெரியுமா?

உறவில் இடைவெளி தேவை..! 

உங்கள் மீதான நம்பிக்கையை உருவாக்க கொஞ்சம் நேரம் எடுக்கும். அதற்கு அவரை அனுமதிக்கவும். அன்பான வார்த்தைகள், செயல்கள் மற்றும் நடத்தைகள் மூலம் வலுவான அடித்தளத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள். கொஞ்ச காலம் தேவைப்பட்டால், உங்கள் முன்னாள் காதலரிடமிருந்து விலகி இருங்கள்; ஆரோக்கியமான எல்லைகள் ஒவ்வொரு உறவுக்கும் நல்லது என்பதை அறிந்து கொள்ளுங்கள். 

உறவுகளுக்குள்ளான தூரம், இடைவெளியை பற்றி நாம் அடிக்கடி பயப்படுகிறோம், அதுவே ஒரு உறவைக் கலைத்துவிடும் என நினைத்துக்கொள்கிறோம். ஆனாலும் உறவில் சில நேரம் இடைவெளிகள் அளிப்பது, குறிப்பிட்ட எல்லைகளை பராமரிப்பது தான் உண்மையில் உறவு செழிக்க வளர உதவுகிறது. அதனால் உங்கள் கணவரிடம் பேசிய பிறகு அவர் நிலைமையை புரிந்து கொள்ள கொஞ்சம் நேரம் அளியுங்கள். இதை கணவரிடம் முறையாக சொல்லமுடியாவிட்டால் இருவரும் குடும்ப நல ஆலோசகரை அணுகி தீர்வு காணுங்கள். 

இதையும் படிங்க: குறையாத மோகம்.. இரவில் போடும் செக்ஸ் ரூல்ஸ்... ட்ரெஸ் கூட கழட்டாம இப்படியும் ஒரு கேவலமான தாம்பத்தியம் உண்டா?

click me!