ணவனை ஒரு பொறுப்பற்ற கணவனாக வளர்த்து வைத்திருப்பதாக கூறி, பெண்கள் தங்களுடைய மாமியாரை தான் குற்றஞ்சாட்டுவார்கள். ஆனால் ஆண்கள் வீட்டு வேலை செய்யாமல் இருப்பதற்கு வேறுசில காரணங்களும் உள்ளன
பெரும்பாலான இந்திய குடும்பங்களில் ஆண்கள் வீட்டு வேலைகளில் மனைவிகளுக்கு ஒரு சிறு உதவி கூட செய்யமாட்டார்கள். அப்படியே ஏதாவது உதவி செய்வதாக கூறி முன்வந்தாலும், அவர்களால் பெண்களுக்கு பிரச்னை தான் அதிகரிக்கும். தனது கணவனை ஒரு பொறுப்பற்ற கணவனாக வளர்த்து வைத்திருப்பதாக கூறி, பெண்கள் தங்களுடைய மாமியாரை தான் குற்றஞ்சாட்டுவார்கள். ஆனால் இதையும் தாண்டி, ஆண்கள் மனைவிகளுக்கு வீட்டு வேலை செய்யாமல் இருப்பதற்கு 4 காரணங்கள் கூறப்படுகின்றன. அதுகுறித்து விவரமாக தெரிந்துகொள்ளலாம்.
வழக்கமான காரணங்கள்
இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஆண்கள் வீட்டுப் பொறுப்புகளை தட்டிக் கழிப்பவர்களாகவே உள்ளனர். மேலும் வீட்டு வேலை என்றாலே, அது பெண்களுக்குக்கானது என்பது அவர்களுடைய நம்பிக்கையாக உள்ளது. ஆண்கள் என்றால் பொருளீட்டுவதில் தான் கவனம் செலுத்த வேண்டும். பணம் சம்பாரிப்பது தான் தங்களுடைய தலையாய பணி என்று ஆண்கள் கருதுகின்றனர்.
கடந்த கால விமர்சனங்கள்
ஆண்கள் வீட்டு வேலை செய்வது வேறுவிதமான விமர்சனங்களை ஏற்படுத்தும் என்று அவர்கள் நம்புகின்றனர். வீட்டு வேலை என்றால் அதிகம் கூச்சல் அல்லது விமர்சனங்கள் இருக்கும், அந்த வேலைகளை தான் தவறாக செய்துவிடக் கூடும் என்று ஆண்கள் எண்ணுகின்றனர். அதற்காகவே அவர்கள் வீட்டுப் பணிகளை செய்வதை முற்றிலுமாக நிறுத்திவிடுகிறார்கள். அதுமட்டுமின்றி ஆணுக்கு பெருமை தேவை. அதை வீட்டு வேலையின் மூலம் பெருவது கடினம் என்று ஆண்கள் கருதுகின்றனர்.
அதிகமாக மறந்துவிடக்கூடும்’
நமக்கு நிறைய வேலைகள் செய்ய இருக்கும் போது, அதில் பல பணிகளை நாம் இயற்கையாகவே மறந்துவிடக் கூடும். அதுபோன்ற பிரச்னை வீட்டு வேலையில் உள்ளது. பொதுவாகவே எல்லா வீடுகளிலும் வேலை நிறைய இருக்கும். ஒரு சிறு வேலையை மறந்துவிட்டாலும், அது சங்கிலி தொடராக வந்து நம்மை பாதிக்கும் என்பது ஆண்களுக்கு தெரியும். நிறைய வேலைகளை கொடுக்கும் போது, அதில் சிலவற்றை தான் மறந்துவிடக் கூடும் என்பதால், ஆண்கள் வீட்டு வேலை செய்வதை தவிர்த்துவிடுகின்றனர்.
செக்ஸ் பிரச்னைக்கு தன்னம்பிக்கையும் காரணமாக இருக்கலாம்.!!
பொறுப்புணர்வு வேண்டும்
பொதுவாகவே பெண்களை விடவும் ஆண்களுக்கு பொறுப்புணர்வு என்பது குறைவு தான். தங்களுடைய சொந்த வேலையாக இருந்தாலும், மற்றவர் அவர்கள் மீது திணிக்கும் வேலையாக இருந்தாலும், அதற்கு பொறுப்புணர்வுடன் ஆண்கள் நடந்துகொள்வது கிடையாது. எப்போதும் சோம்பேறிகளாகவே இருக்க விரும்புகின்றனர். தங்களுக்கு வேண்டியதை செய்வது கூட, அவர்களுக்கு பெரும் பிரச்னையாக தெரிகிறது. தன்னைப் பற்றிய கவலைக் கூட இல்லாதவர்களுக்கு, மற்றவர்கள் குறித்து என்ன கவலை இருந்துவிடப் போகிறது.