உங்கள் பற்கள் மஞ்சள் நிறமாகவும், துர்நாற்றமாகவும் இருந்தால், பல் மருத்துவரிடம் செல்லும் முன், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத வைத்தியத்தை முயற்சிக்கவும், பற்களுக்கு பளபளப்பு மற்றும் வாய் துர்நாற்றத்தை நீக்க இது சிறந்த தீர்வாகும்.
மஞ்சள் பற்கள் அல்லது வாய் துர்நாற்றம் இருக்கும் சமயத்தில் யாரிடமாவது பேசும் போதோ அல்லது மற்றொருவரின் முன் சிரிக்கும்போதும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. பற்களின் மஞ்சள் நிறமானது மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இனிப்புகளை உட்கொள்வது, பற்களை சரியாக கவனிக்காதது உள்ளிட்ட பல காரணங்களால் மஞ்சள் பற்கள் ஏற்படுகின்றன. தினமும் உண்ணும் பொருட்களின் துகள்கள் பற்களில் படிந்து கொண்டே இருக்கும், அதனால் பிளேக் உருவாகிறது, இதுவே பற்கள் மஞ்சள் நிறமாக இருப்பதற்கு மிகப்பெரிய காரணம்.
புகையிலை பயன்படுத்துவது, காபி மற்றும் தேநீர் அதிகமாக உட்கொள்வது, புகைபிடித்தல், மோசமான வாய்வழி சுகாதாரம், பற்சிப்பியை பாதிக்கும் நோய்கள், உள்நோய்க்கான மருந்து, வயது அதிகரிப்பு போன்ற பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மஞ்சள் பற்களை வெண்மையாக்க பல் மருத்துவரிடம் செல்லலாம் என்றாலும், உங்கள் மஞ்சள் பற்களை முத்துக்கள் போல ஜொலிக்க சில ஆயுர்வேத வைத்தியங்களையும் முயற்சி செய்யுங்கள்.