Immunity: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும் யோகா முத்திரை இதுதான்!

Published : Nov 07, 2022, 08:47 PM IST
Immunity: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும் யோகா முத்திரை இதுதான்!

சுருக்கம்

எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்த்து சில ஆசனங்களும் உதவுகிறது.

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, பலரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்வது வழக்கம். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருந்தால், நோய்கள் எதுவும் நம்மை நெருங்காமல் இருக்கும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருந்தால், சிறு சிறு வியாதிகள் கூட நம்மை எளிதில்  நெருங்கி விடும். எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்த்து சில ஆசனங்களும் உதவுகிறது.

நோய் எதிர்ப்புச் சக்தி

நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாட்டால் தான் பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் அல்லது பிற நுண்ணுயிர்களால் ஏற்படும் தொற்று எளிதில் நம்மைத் தாக்கி விடுகிறது. ஆகவே, இவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

யோகா முத்திரை செய்யும் முறை

  1. நம் உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, ஒரு சில யோக முத்திரைகள் உதவி செய்கிறது. அதில் ஒன்றைத் தான் எப்படி செய்வது என இப்போது காண்போம். 
  2. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக் கொள்ள இந்தப் பயிற்சியை மறவாமல் தினசரி செய்து வாருங்கள்.
  3. முதலில் கடைசி விரலான சுண்டு விரலை மடக்கி, அதன் மீது கட்டை விரலை வைத்து, சிறிதளவு அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.
  4. ஆள்காட்டி விரல், நடு விரல் மற்றும் மோதிர விரல் ஆகியவை நேராக இருக்க வேண்டியது அவசியம்.
  5. இந்த மூன்று விரல்களும் ஒன்றை ஒன்றுத் தொடாமல் சிறு இடைவெளி விட்டு, ஒரு சூலத்தை போல நேராக நிற்க செய்ய வேண்டும்.

Coriander Seeds: நீரிழிவைத் தடுக்கும் கொத்தமல்லி விதைகள்: இது எப்படித் தெரியுமா?

யோகா முத்திரையின் பலன்கள்

  • நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
  • நம்மைச் சுற்றியுள்ள பகைவர்கள் விலகுவர்.
  • மனக்குழப்பத்தில் உள்ளவர்களுக்கு மனத்தெளிவு ஏற்படும்.
  • தடைகள் விலகி, ஆன்மீக வளர்ச்சி உண்டாகும்.
  • உடலில் உள்ள அனைத்து பாகங்களும் சரிய்ன முறையில் இயங்கும்.
  • தேஜஸ் கைகூடுகிறது.
  • சூட்சுமமான பொருட்களை உணரும் ஆற்றல் கிடைக்கும். 

PREV
click me!

Recommended Stories

Ladies Finger in Winter : குளிர்காலத்துல வெண்டைக்காய் 'கண்டிப்பா' சாப்பிடனும் தெரியுமா? நிபுணர்கள் சொல்ற அறிவியல் உண்மை
Green Peas Benefits : பச்சை பட்டாணியை அடிக்கடி சாப்பிடுங்க... பல பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வா அமையும்