உச்சி குளிர "வெள்ளரிக்காய் மோர் குழம்பு" ! செய்வோமா?

By Dinesh TG  |  First Published Nov 7, 2022, 8:38 PM IST

இந்த பதிவில் உடல் குளிர்ச்சியாக வைக்க உதவும் :வெள்ளிரிக்காய் மோர் குழம்பினை எப்படி சுவையாக செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.


நாம் அன்றாடம் உண்ணும் உணவில் வழக்கமாக சாம்பார், வத்தக்குழம்பு, காரக்குழம்பு, ரசம் என்று செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? அப்படியெனில் ஒரு முறை இப்படி மோர் குழம்பு செய்து பாருங்க.

மோர் குழம்பானது உடல் சூட்டை தனித்து, குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இதில் வெள்ளரிக்காய் சேர்த்து செய்வதால் இதன் சுவை மேலும் சிறப்பாக இருக்கும். இதனை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை அலாதியாக இருக்கும். ஒரு சிலர் மோர் குழம்பில் வடையை ஊற வைத்தும் சாப்பிடுவர். 

Latest Videos

undefined

இந்த பதிவில் உடல் குளிர்ச்சியாக வைக்க உதவும் :வெள்ளிரிக்காய் மோர் குழம்பினை எப்படி சுவையாக செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

மோர் - ஒரு கப்
வெள்ளரிக்காய்- 100 கிராம் 
தேங்காய் - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
சின்ன வெங்காயம்-2
கடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை,- 1 கொத்து 
உப்பு -தேவையான அளவு
தேங்காய் எண்ணெய்-தேவையான அளவு 

Mutton Kadai Recipe : பன்னீர் கடாய் தெரியும். அதென்ன ''மட்டன் கடாய்''! வாங்க செய்யலாம்!

செய்முறை:

முதலில் வெள்ளரிக்காயினை அலசி விட்டு, அதனை ஒரே மாதிரியான சிறு அளவில் துண்டங்களாக வெட்டிக் கொண்டு, அதனை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். 

பின் மிக்சி ஜாரில் துருவிய தேங்காய், ஊற வைத்த கடலைப் பருப்பு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், இஞ்சி , சீரகம் ஆகியவற்றை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மைப் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் வேக வைத்து எடுத்துள்ள வெள்ளரிக்காயினை போட்டு ,அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவினையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து விட வேண்டும். இப்போது கடைந்து வைத்துள்ள மோரினை சேர்த்து நன்கு கலந்து ,தீயினை சிம்மில் வைத்து கொதிக்க வைத்து விட்டு , அடுப்பை ஆஃப் செய்து , பாத்திரத்தை இறக்கி விட வேண்டும். 

அடுப்பில் மற்றொரு கடாய் வைத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின், கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொண்டு, தாளித்ததை குழம்பில் சேர்த்துவிட்டால் போதும்.அசத்தலான சுவையில் மோர் குழம்பு ரெடி!

click me!