Eyesight: உங்கள் கண் பார்வையை தெளிவாக்க இந்த உணவுகள் போதும்!

By Dinesh TGFirst Published Nov 20, 2022, 2:53 PM IST
Highlights

செல்போனை அதிகளவில் பார்ப்பது மற்றும் தவறான உணவுப்பழக்கம் ஆகும். கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்கவும் உதவுகின்ற உணவுகள் குறித்து பார்ப்போம்.

தொழில்நுட்ப வளர்ச்சியால்,  தற்காலத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அனைவரது கையிலும் செல்போன் இல்லாமல் இல்லை. பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர்கள் கூட செல்போனை பயன்படுத்தும் நிலைமை வந்துவிட்டது. இதனால், இளம் வயதிலேயே கண்பார்வை குறைபாடு வரும் அபாயங்கள் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் கண்பார்வை குறைபாடு, வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட நிலையில், இப்போதெல்லாம் சிறுவர், சிறுமியர்களுக்கு கூட ஏற்படுகிறது. இதற்கு மிக முக்கிய காரணங்களாக கருதப்படுபவை யாதெனில், செல்போனை அதிகளவில் பார்ப்பது மற்றும் தவறான உணவுப்பழக்கம் ஆகும். கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்கவும் உதவுகின்ற உணவுகள் குறித்து பார்ப்போம்.

கண்பார்வை மேம்படுத்த உதவும் உணவுகள்

கீரை வகைகள்

பொன்னாங்கண்ணிக் கீரை மற்றும் முருங்கைக் கீரை இவையிரண்டும், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மிகச் சிறந்த மருந்துகளாகும். கண்களுக்குத் தேவையான வைட்டமின் ஏ மற்றும் அமினோ அமிலங்கள் இந்த கீரைகளில் அதிகளவில் நிறைந்துள்ளது.

Teeth: பற்களில் மஞ்சள் கறையா? இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்!

கேரட்

கண்களுக்கு ஆரோக்கியம் அளிக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ ஆகிய சத்துக்கள் கேரட்டில் நிறைந்துள்ளது. ஆகவே கேரட்டைத் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், கண் பார்வையை தெளிவாக்கவும், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

சிட்ரஸ் வகைப் பழங்கள்

சிட்ரஸ் வகைப் பழங்களான திராட்சை, ஆரஞ்சு மற்றும் எழுமிச்சை பழம் ஆகிய 3 பழங்களும் கண்களின் விழித்திரையை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவி புரிகிறது.

பாதாம் பருப்பு

பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ, அதிக அளவில் நிறைந்துள்ளது. இது உங்கள் கண் பார்வையின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளி கிழங்கில் பீட்டா கரோட்டின் அதிகளவில் நிரம்பியுள்ளது. இக்கிழங்கு கண்களில் உண்டாகும் விழிப் புள்ளி சிதைவு பிரச்சனையை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.  

click me!