Teeth: பற்களில் மஞ்சள் கறையா? இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்!

முக அழகை பிரதிபலிப்பதில் பற்களுக்கு முக்கிய இடமுண்டு. அப்படிப்பட்ட பற்தளில் மஞ்சள் கறை படிந்திருந்தால், மற்றவர்கள் முன் நம்மால் வாய் திறந்து கூட பேச முடியாது. 

Yellow stains on teeth? These tips are for you!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். முக அழகை பிரதிபலிப்பதில் பற்களுக்கு முக்கிய இடமுண்டு. அப்படிப்பட்ட பற்தளில் மஞ்சள் கறை படிந்திருந்தால், மற்றவர்கள் முன் நம்மால் வாய் திறந்து கூட பேச முடியாது. நம்மில் பலருக்கும் பற்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதுண்டு. பற்கள் வெண்ணிறத்தில் இல்லாமல், மஞ்சள் கறை படிந்து தென்படுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அவற்றில் முறையான பற்கள் சுகாதாரமின்மை, மரபணுக்கள், காபி, டீ அருந்தும் பழக்கம்,  புகைப்பிடித்தல் மற்றும் கார்பனேட்டட் பானங்களை அருந்துவது, இவையெல்லாம் பொதுவான காரணங்களாக காணப்படுகிறது.

பற்களில் மஞ்சள் கறை

பலரும் பலவிதமான டூத் பேஸ்ட்டை பயன்படுத்தியும், பற்களின் மஞ்சள் கறையை நீக்க முடியாமல் தவிக்கிறார்கள். எதைச் செய்தாலும் பலனில்லை என்பவர்கள், பல் மருத்துவரிடம் நேராக சென்று செயற்கை முறைகளைப் பின்பற்ற தொடங்கி விடுகின்றனர். உண்மையைச் சொல்வதென்றால், பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை, வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே போக்க முடியும். அது எப்படி என இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பற்களில் மஞ்சள் கறையை போக்கும் வழிகள்

ஆப்பிள் சிடார் வினிகர்

200 மில்லி அளவுத் தண்ணீரில், 2 ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை கலந்து கொண்டு, வாய்க் கொப்பளிக்க வேண்டும். இந்த கலவையை வாயில் ஊற்றி, வாயின் உள்ளே அனைத்துப் பகுதிகளிலும் நுழையும்படி 1 நிமிடம் வரை வாய்க்குள்ளேயே வைத்திருந்து, வாயைக் கொப்பளிக்க வேண்டும். தொடர்ந்து இப்படிச் செய்து வந்தால், பற்களில் இருக்கும் மஞ்சள் கறை நீங்கும்.

பழத்தோல்கள்

வாழைப்பழம், எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களின் தோல்களை எடுத்து, பற்களின் மேல் வைத்து அடிக்கடி தேய்த்து வந்தால் பற்களின் மஞ்சள் நிறம் மற்றும் பற்களில் இருக்கும் கறைகளும் கொஞ்சம் கொஞ்சமாக அகலும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயைப் உபயோகப்படுத்தி ஆயில் புல்லிங் செய்வதால், பற்களின் மேல் பிளேக் படியாமலும், பற்களின் மேல் மஞ்சள் கறை படியாமலும் தடுக்கும்.

பேக்கிங் சோடா

பற்களுக்கு பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தலாம். இது ஈறுகளைப் பாதுகாத்து, பற்கள் மற்றும் வாய்ப் பகுதியில் உள்ள பாக்டீரியாக்களைத் தாக்கி அழிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. 

Rye Rice: நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை அளிக்கும் கம்பு சாதம்! செய்வது எப்படி?

கற்றாழை

தினந்தோறும் நன்றாக கழுவிய கற்றாழை ஜெல்லை, 2 முறை பற்களில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.பின்னர், குளிர்ந்த நீரில் பற்களை கழுவி வந்தால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறை நீங்கி வெண்மையாகும்.

கொய்யா இலைகள்

தினந்தோறும் கொய்யா இலைகளை வாயில் போட்டு சிறிது நேரம் மென்று, பின் அதனை துப்பி விட வேண்டும். அடிக்கடி இப்படிச் செய்வதால், பற்களின் பின்னால் இருக்கும் மஞ்சள் கறைகள் நீங்கும்.

சாம்பல், கரி மற்றும் வேப்பங்குச்சி ஆகியவற்றை கொண்டு பற்களை துலக்கினால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறை நீங்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios