நீரிழிவு நோய் குணப்படுத்த முடியாது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் சரியான உணவு பழக்க வழக்கம், உடல் இயக்கம் உள்ளிட்டவற்றால் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயின் தீவிரம் மற்றும் அதன் பாதிப்புகளை குறித்து நன்றாக தெரிந்துவைத்துள்ளனர். நீரிழிவு பாதிப்பை ஒரு நோயாக கருதிய வாழ்க்கை முறை கடந்துவிட்டது. அதி தீவிர நோய் பாதிப்புகள், உடல்நல பிரச்சினைக்கு நம்மை விட்டு செல்ல நீரிழிவு நோய் போதும் என்கிற விழிப்புணர்வு இன்று பலரிடையே நிலவுகிறது. அதன்மூலம் பலரும் கட்டுப்பாடான உணவு முறையைப் பின்பற்ற விரும்புகிறார்கள். அதிலும் சில பேர் வருமுன் காப்பதற்கான நடைமுறை வாழ்க்கையை வாழ முயற்சிக்கின்றனர். அந்த வகையில் நீரழிவு நோய் பாதிப்பை கட்டுக்குள் வைத்திருக்கவும் வருமுன் காப்பதற்கும் 5 உணவுப் பொருட்களைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்வது அவசியமாகும். அதுகுறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
கொத்தமல்லி
undefined
நம்முடைய சமையலில் கொத்தமல்லிக்கு தனி இடம் உண்டு. இது சேர்க்கப்படாத சமையலே கிடையாது என்றும் சொல்லலாம். வெறும் நறுமணத்திற்காக மட்டுமல்லாமல் உணவில் சுவையையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் வழங்கவல்லது கொத்தமல்லி. நீரிழிவு நோய் பிரச்சனை உள்ளவர்களுக்கு கொத்தமல்லி சாப்பிடுவதன் மூலம், பாதிப்பு கட்டுக்குள் இருக்கும். தொடர்ந்து உணவின் மூலம், இந்த இலைகளை உட்கொண்டு வந்தால் இன்சுலின் ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும். வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும். மேலும் கொத்தமல்லியில் எத்தனால் என்கிற பொருள் உள்ளது. இதை அடிக்கடி சாப்பிடுவோருக்கு நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.
வெந்தயம்
வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பு, தினமும் பத்து கிராம் வெந்தயத்தை ஊற வைத்து குடித்து வந்தால் டைப் 2 நீரிழிவு பிரச்சனையை கட்டுப்படுத்தலாம் என்று தகவல் வெளியிட்டுள்ளது. வெந்தயம் செரிமான செயல்பாடுகளை மேம்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்தும். இதன் மூலம் நாம் உணவின் மூலம் தினசரி உட்கொள்ளும் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.
இலவங்கப்பட்டை
சமையலுக்கு பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்களில் லவங்கப்பட்டைக்கு முக்கிய இடம் உண்டு. பொதுவாக அசைவ உணவுகளில் இலவங்கப்பட்டை போன்ற மசாலாப் பொருட்களை அதிகளவில் சேர்ப்போம். ஒரு சிலருக்கு இலவங்கப்பட்டை வைத்து தேநீர் போட்டு குடிப்பது மிகவும் பிடிக்கும். அவ்வப்போது லவங்கப்பட்டை செய்யப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தால் டைப் 2 நீரிழிவு பிரச்சனை குணமாகும். மேலும் இது இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறது. அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் ஆய்வின்படி, இலவங்கப்பட்டையின் நுகர்வு, நீரிழவு பிரச்சனையை 18 முதல் 29 சதவீதம் வரை குறைப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இயற்கையான முறையில் விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்க எளிய டிப்ஸ்..!!
மஞ்சள்
நமது முன்னோர்கள் காலத்திலிருந்து மஞ்சளுக்கு மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது என்று சொல்லப்பட்டு வருகிறது. இதை பல்வேறு அறிவியல் ஆய்வுகளும் உறுதி செய்துள்ளன. அதன் காரணமாகவே, உலகளவில் இந்திய மஞ்சளுக்கு மிகப்பெரிய மதிப்பு உருவாகியுள்ளது. மஞ்சளில் உள்ள குர்குமின் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மஞ்சளை பால் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிடுவதன் மூலம், நீரிழிவு நோய் பாதிப்பு கட்டுக்குள் வரும் என மருத்து ஆய்வுகள் கூறுகின்றன.
கறிவேப்பிலை
அனைத்து தென்னிந்திய உணவுகளிலும் கறிவேப்பிலை ஒரு தவிர்க்க முடியாத பொருளாகும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும் இது நல்லது என்கின்றனர் நிபுணர்கள். தினமும் காலையில் 10 புதிய கறிவேப்பிலையை சாப்பிடுவது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.அதேபோல தாளிப்புக்கு சேர்க்கப்படும் கறிவேப்பிலையை சாப்பிடுவதன் மூலமும் சக்கரை நோய் கட்டுக்குள் வருகிறது. இதுதவிர, கறிவேப்பிலையை பொடி செய்து சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் ஒன்றாக கிடைத்துவிடுகிறது.