Chapati: உடல் எடையைக் குறைக்கும் சப்பாத்தி: தினமும் சாப்பிடலாமா?

Published : Dec 09, 2022, 03:23 PM IST
Chapati: உடல் எடையைக் குறைக்கும் சப்பாத்தி: தினமும் சாப்பிடலாமா?

சுருக்கம்

தினந்தோறும் சப்பாத்தியை சாப்பிடுவது நல்லதா அல்லது கெட்டதா என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். 

இன்றைய காலத்தில் அனைவரும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சப்பாத்தியை தினந்தோறும் சாப்பிட்டு வருகின்றனர். முழு கோதுமை கொண்டு தான் சப்பாத்தி மாவு தயாரிக்கப்படுகிறது. இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் குறிப்பாக, உடல் எடையை குறைப்பதற்கு டயட்டில் இருக்கும் நபர்கள், சாதத்திற்கு பதில் சப்பாத்தியை தங்களது தினசரி உணவில் சேர்த்து வருகின்றனர். இருப்பினும், தினந்தோறும் சப்பாத்தியை சாப்பிடுவது நல்லதா அல்லது கெட்டதா என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். 

சாஃப்ட்டாக சப்பாத்தி செய்வதற்கு நல்ல தரமான கோதுமை மாவு மிகவும் அவசியம். தரமான மாவு இல்லையென்றால், சப்பாத்தி சரியாகவும், சுவையாகவும் இருக்காமல் போய்விடும். வீட்டில் அரைத்த மாவோ அல்லது கடையில் வாங்கிய மாவோ ஒருமுறை சலித்து வைத்துப் பயன்படுத்துவது தான் மிகவும் நல்லது.

சப்பாத்தியின் எவ்வாறு உதவும்?

சப்பாத்தியில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் நிரம்பியுள்ளது. ஆகவே, இது உடலுக்குத் தேவையான ஆற்றலை கொடுக்கிறது. மேலும், சப்பாத்தி சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்க உதவுகிறது. இதன் விளைவாக உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது. 

சப்பாத்தி நம் உடலுக்கு ஆற்றலை வழங்குவது  மட்டுமல்லாமல், மனநிலையை மேம்படுத்தவும் உதவி புரிகிறது. 

குறிப்பாக, எண்ணெய் எதுவும் சேர்க்காமல் சப்பாத்தியை சுடும் போது, அதில் கலோரிகள் குறைவாக இருப்பதன் காரணமாக, உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த உணவாக கருதப்படுகிறது.  

ஆரோக்கியத்தின் வரப்பிரசாதம் ஆட்டு இரத்த பொரியல்! சுவையாக செய்வது எப்படி?பார்க்கலாம் வாங்க!

சப்பாத்தியில் உள்ள சத்துக்கள்

முழுமையான கோதுமை கொண்டுத் தயாரிக்கப்படும் சப்பாத்தியில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி6, வைட்டமின் பி9 மற்றும் வைட்டமின் ஈ போன்ற வைட்டமின்கள் அதிகளவில் நிரம்பியுள்ளது. 

சிலிகான், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், அயோடின், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் சப்பாத்தியும் நிரம்பியுள்ளது.

ஒரு சிறிய அளவிலான சப்பாத்தியில் 3 கிராம் புரோட்டீன், 70 கலோரிகள்,  0.4 கிராம் கொழுப்பு மற்றும் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும் கார்போஹைட்ரேட் 15 கிராமும் அதிகளவில் நிறைந்துள்ளது.   

சப்பாத்தியின் பயன்கள்

சப்பாத்தியை சாப்பிட்டால் சருமம் பளபளப்பாகவும் இருக்கும்; ஜொலிக்கவும் செய்யும். ஆக, சருமத்திற்கு சப்பாத்தி மிகவும் ஏற்றது.

சப்பாத்தியில் கரையக் கூடிய நார்ச்சத்துக்கள் அதிகளவில் இருப்பதால், இரத்தத்தில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவி செய்கிறது.

சப்பாத்தியை சாப்பிட்டால் மலச்சிக்கலைத் தடுக்க முடியும். மேலும், இது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவி புரிகிறது.

PREV
click me!

Recommended Stories

Lip Scrub : உதடுகளின் கருமை நிறம் மாறி 'அழகாக' வாரம் 2 முறை 'இதை' தடவுங்க
Winter Skincare : முகத்திற்கு லெமன் ஜுஸ் தடவலாமா? குளிர்கால சரும பராமரிப்பு 'இது' முக்கியம்