தேயிலை செடியில் உள்ள மொட்டுகள் மற்றும் இலைகள் முழுவதுமாக விரிவதற்கு முன்னரே பறிக்கப்பட்டு ஒயிட் டீ தயாரிக்கப்படுகிறது. இந்த மொட்டுகளின் மீது சிறிய அளவிலான வெள்ளை முடிகள் இருப்பதனால், இது வெள்ளை டீ என்னும் பெயரைப் பெற்றுள்ளது.
உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கிறது ஒயிட் டீ. உடல் எடையை விரைவாக குறைக்க முயற்சி செய்யும் நபர்களுக்கு, இந்த டீ மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே கூறலாம். தேயிலையில் இருந்து பெறக்கூடியவை தான் வெள்ளை தேநீர். இது மிகவும் குறைவான அளவில் பதப்படுத்தப்பட்ட டீ வகையைச் சேர்ந்தது. தேயிலை செடியில் உள்ள மொட்டுகள் மற்றும் இலைகள் முழுவதுமாக விரிவதற்கு முன்னரே பறிக்கப்பட்டு ஒயிட் டீ தயாரிக்கப்படுகிறது. இந்த மொட்டுகளின் மீது சிறிய அளவிலான வெள்ளை முடிகள் இருப்பதனால், இது வெள்ளை டீ என்னும் பெயரைப் பெற்றுள்ளது.
வெள்ளைத் தேநீர் உள்ள ஊட்டச்சத்துக்கள்
undefined
வெள்ளைத் தேநீரில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இதில் பைட்டோநியூட்ரியன்கள், பாலிபினால்கள் மற்றும் பலவித கேட்டசின்கள் உள்ளது. மேலும் இதில் ஃப்ளோரைடு, டானின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்புத் தன்மை இதில் அதிகமாக காணப்படுகிறது. ஆகையால், இந்த டீ குடித்தால் பல நோய்களில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கும். க்ரீன் டீயை விடவும், வெள்ளை டீயில் 20-30% வரை உயர் ஆண்டி ஆக்ஸிடண்ட் தன்மை உள்ளது. அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால், உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள் செல்களை புதுப்பிக்க உதவுகிறது. இதன் காரணமாக நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு நல்ல தீர்வாக அமையும் என்பதோடு முக்கியமாக முதுமையைப் போக்க வல்லது.
ஆரோக்கியத்தின் வரப்பிரசாதம் ஆட்டு இரத்த பொரியல்! சுவையாக செய்வது எப்படி?பார்க்கலாம் வாங்க!
வெள்ளைத் தேநீரின் நன்மைகள்