Hip Pain: இடுப்பு வலியை குறைக்க உதவும் சூப்பர் பானம்: குடிச்ச உடனே நிவாரணம் கிடைக்கும்!

By Dinesh TG  |  First Published Dec 9, 2022, 1:12 PM IST

இடுப்பு வலி வருவதற்கான பொதுவான சில காரணங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.


இடுப்பு வலி என்றாலே மிகவும் மோசமான பிரச்சனையாகும். இடுப்பு வலி வந்து விட்டால் எந்த வேலையும் செய்ய முடியாது. இதனை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால், வலி அதிகமாக வாய்ப்புள்ளது. சிலருக்கு உட்கார்ந்து எழுந்தாலே இடுப்பு வலி வந்து விடும். இதனை சிலபேர் மிகச் சாதாரணமாக கடந்து விடுகின்றனர். ஆனால் இது ஒரு தீவிரமான பிரச்சனையின் அறிகுறியாகும். இப்படியாக இடுப்பு வலி வருவதற்கான பொதுவான சில காரணங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

முதுகு வலி ஏன் ஏற்படுகிறது?

Latest Videos

undefined

எலும்புகளுக்கு இடையே இருக்கும் குருத்தெலும்பு சேதமடையும் பொழுது, ​​இடுப்பு வலி ஏற்படத் தொடங்குகிறது. இந்நேரத்தில், ​​சில சமயம் பாதங்களில் கடுமையான வலி ஏற்பட வாய்ப்புள்ளது. பல சமயம், சாதாரணமாக உட்கார்ந்து எழும் போது, ​​கடுமையான வலியை உண்டாக்குகிறது. அதே போல நாம் அமரும் விதமும் இடுப்பு வலிக்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது.

இடுப்பின் மீது அதிகளவு அழுத்தம் கொடுக்கப்படுவதால் வலி ஏற்படுகிறது. இடுப்பு வலிக்கு சில நொடிகளில் நிவாரணம் அளிக்கும்  சுக்கு டீயை எப்படிச் செய்வது என்று இப்போது காண்போம்.

தேவையான பொருட்கள்

சுக்கு – 1 கிராம்
கிராம்பு – 5
மிளகு – 5
டீ தூள் – ஒரு டீஸ்பூன்
கொள்ளு – ஒரு டீஸ்பூன்
தண்ணீர் – ஒரு கிளாஸ்
பனைவெல்லம் – தேவைக்கேற்ப

ருசியான மசாலா சப்பாத்தி சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கலாம் வாங்க!

சுக்கு டீ செய்முறை

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொத்தித்தும்  டீ தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும். டீ தூளை சேர்த்த பின்னர் சுக்கு, மிளகு, கிராம்பு மறங கொள்ளு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

பின்னர் அடுப்பை மிதமான  சூட்டில் வைத்து 3 நிமிடங்கள் டீயை கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் தேவையான அளவு பனைவெல்லத்தை கலந்து தினந்தோறும் காலை அல்லது மாலை வேளையில் குடித்து வர வேண்டும். இப்படியாக அடிக்கடி சுக்கு டீ குடித்து வந்தால் இடுப்பு வலி விரைவில் பறந்து விடும்.

இடுப்பு விலி உள்ளவர்கள் மறக்காமல் இந்த சுக்கு டீயை செய்து குடியுங்கள். பொதுவாக சுக்கு நம் உடலுக்கு பல நன்மைகளை அளிப்பதால், இந்த சுக்கு டீ உடல் நலத்திற்கும் மிக மிக நல்லது. மேலும், உட்காரும் போது கவனமாக இருக்க வேண்டியதும் அவசியமாகும். இடுப்பு வலிக்கு மிகச் சிறந்த நிவாரணியாக இந்த சுக்கு டீ பானம் விளங்குகிறது

click me!