ஒருநாளைக்கு எத்தனை முறை மலம் கழிக்கிறீர்கள் என்று கவனித்தது உண்டா..?

By Dinesh TG  |  First Published Dec 9, 2022, 11:16 AM IST

உடலை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது, உடற்பயிற்சி, உறக்கம் மற்றும் ஓய்வுக்கு இணையானது.  அதனால் தினசரி நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் கவனத்துடன் இருக்க வேண்டும்.  அந்த குறிப்பிட்ட செயல் முறையில் ஏதேனும் மாற்றம் ஏற்படுவதாக இருந்தால்,  மருத்துவரை அணுக வேண்டும்.
 


தினசரி நம் உடலும் மனமும் ஒருங்கே இயங்கவேண்டும்.  அப்போதுதான் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.  இந்த செயல்பாடுகளில் ஏதேனும் கோளாறு இருந்தால்,  ஒட்டுமொத்த உடல் இயக்கமுமே பாதிக்கப்பட்டுவிடும். உடல்  இயக்கம் சார்ந்த செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிப்பது உடற்பயிற்சி.  அதைத்தொடர்ந்து  உடலுக்கு தேவையான ஓய்வு.  இதை தவிர்த்து மற்ற ஒன்றும் இருக்கிறது.  அதுதான் கழிவுகளை வெளியேற்றுதல். சிறுநீர் கழித்தல்,  மலம் கழித்தல் மற்றும் வியர்வை வெளியேற்றம் உள்ளிட்டவை, மனித உடலிலிருந்து  தினசரி வெளியேற்றப்பட வேண்டிய கழிவுகள் ஆகும். அப்போதுதான் நான் உடல்நலத்துடன் இருக்கிறோம் என்பது தெரியவரும்.  ஒருவேளை உங்களுக்கு கழிவுகள் வெளியேற்றுவதில் மாறுபாடுகள் இருக்கும்பட்சத்தில்,  உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 

ஒரு நாளில் ஒருவர் சராசரியாக இவ்வளவு தான் மலம் கழிக்க வேண்டும் என்கிற நடைமுறை உள்ளது.  ஒரு ஆரோக்கியமான நபர் எவ்வளவு மலம் கழிக்க வேண்டும் என்கிற கணக்கு உள்ளது.  அதைத் தாண்டி ஒருவர் மலம் கழித்தார் என்றார்,  அவருக்கு குடல் இயக்கத்தின் பிரச்சனை இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒருவருக்கு குடல் அசைவு அதிகமாக  இருக்கும் அறிகுறி தெரிந்தால்,  அவருக்கு வயிற்றில் ஏதோ அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது என்று பொருள். பொதுவாக இந்த பாதிப்புகள் செரிமான பிரச்சனைகள், குடல் எரிச்சல் மற்றும் குடல் அழற்சி போன்ற நோய்களை குறிக்கிறது.. ஆனால் ஒரு சில நேரங்களில் இந்த அறிகுறிகள் புற்றுநோய் பாதிப்பையும் குறிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்

Latest Videos

 ஒருவர் சராசரி அளவை காட்டிலும் அதிகமுறை மலம் கழித்தார் என்றால்,  அது வயிற்று புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய்  பாதிப்பிற்கான அறிகுறியாக இருக்கலாம். பெரும்பாலான சமயங்களில் குடல் புற்றுநோய் அறிகுறிகளை வெளிக்காட்டாது என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் குடல் இயக்கம் சார்ந்து அசாதாரண பிரச்சினைகள் எதிர்கொள்ள நேர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது தீர்வாக அமையும். ஒருவேளை இந்த பாதிப்பு விரைவாக கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில்,  உயிர் போகும் அபாயம் நிகழ்வதற்கான வாய்ப்பு பெரிய அளவில் குறைகிறது. 

சமையலறையில் இருந்தாலும் நாம் தவிர்க்க வேண்டிய 5 பொருட்கள்..!!

வயிற்று வலி,  மலத்தில் ரத்தம் , பின்பகுதி வீங்கிய இருப்பது , பசியின்மை,  திடீர் எடை இழப்பு போன்றவை  குடல் புற்றுநோய்க்கான முக்கிய அறிகுறிகள் என்று மருத்துவர்கள்  கூறுகின்றனர். அதேபோன்று வயிறு பகுதியில் ஏற்படும் புற்று நோய்க்கும், இந்த அறிகுறிகள் பொருந்தும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
புற்றுநோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிந்தால் விரைவாக குணப்படுத்திவிடலாம்.  உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கிறது. அதனால் அறிகுறிகள் மூலம் நோய் பாதிப்பை கண்டறிவதற்கு விழிப்புணர்வு தேவை.  அந்த நோக்கத்தில்தான் இந்த கட்டுரை பதிவு செய்யப்பட்டுள்ளது . உணவு கட்டுப்பாடு,  சரியான முறையில் உடல் இயக்கம்,  தேவையான ஊட்டச்சத்து உள்ளிட்டவற்றை அனைவரும் ஏற்படுத்திக் கொள்ளும் பட்சத்தில்,  நோய் பாதிப்பு ஏற்படாமல் வரும்முன் காக்கலாம்.

click me!