ஆரோக்கியத்தின் வரப்பிரசாதம் ஆட்டு இரத்த பொரியல்! சுவையாக செய்வது எப்படி?பார்க்கலாம் வாங்க!

By Dinesh TG  |  First Published Dec 8, 2022, 7:00 PM IST

வாருங்கள்! ருசியான ஆட்டு இரத்தம் வைத்து இரத்த பொரியலை எளிமையாக வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


அசைவ பிரியர்களுக்கு சண்டே என்றாலே ஹாப்பி தான். அன்று மட்டுமே அனைவருக்கும் விடுமுறை என்பதால், பிடித்த அசைவ உணவுகளை பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம். அப்படியாக இந்த வார சண்டேக்கு அசத்தலான, ஊட்டச்சத்தான ஒரு அசைவ ரெசிபியை தான் இன்று நாம் காண உள்ளோம். 

அசைவ பிரியர்கள் பெரும்பாலும் மட்டன் சேர்த்து செய்யப்படும் அனைத்து உணவுகளையும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.அந்த வகையில் இன்று நாம் ஆட்டு ரத்தத்தை வைத்து சுவையான ரத்தப் பொரியலை  செய்ய உள்ளோம். இதனை நீங்கள் 1 முறை செய்தால் வீட்டில் உள்ளவர்கள் இதனை அடிக்கடி செய்து தருமாறு அன்பு கட்டளையிடுவார்கள். 

Latest Videos

ஆட்டு இரத்தத்தில் மிக அதிகமான இரும்பு சத்து உள்ளதால் இரத்த சோகையை தடுக்கும். மேலும் இதில் சோடியம், கால்சியம், ஒமேகா-3 ,இரும்பு சத்து , பாஸ்பரஸ் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

 அது தவிர இதில் விட்டமின்கள், புரோட்டீன் போன்ற உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் ஒரு சேர இருப்பதால் இதனை நாம் வாரம் ஒரு முறையாவது செய்து சாப்பிட்டால் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 

வாருங்கள்! ருசியான ஆட்டு இரத்தம் வைத்து இரத்த பொரியலை எளிமையாக வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

ஆட்டு இரத்தம் - 1 பௌல் 
சின்ன வெங்காயம் - 25 கிராம் 
பூண்டு - 2 பற்கள் 
பச்சை மிளகாய் - 3
தேங்காய் - 1 கப்
மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள்-1 ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 
கடுகு - 1/2 ஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன் 
கறிவேப்பிலை - 1 கொத்து 
மல்லித்தழை-1 கொத்து 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

மொருமொருப்பான சிக்கன் லாலி பாப்!- வாங்க சமைக்கலாம்! 

செய்முறை: 

முதலில் ஆட்டு இரத்தத்தை ஒரு பௌலில் போட்டு கையால் நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம்,பூண்டு மற்றும் பச்சை மிளகாயை மிக பொடியாக அரிந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடு செய்ய வேண்டும். எண்ணெய் சூடான பின் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். 

பின் கடாயில் அரிந்த பூண்டு ,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட வேண்டும். அடுத்ததாக அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கி விட்டு பின் அதில் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். 

இப்போது பிசைந்து வைத்துள்ள இரத்தத்தை ஊற்றி,கொஞ்சம் கொத்தி விட வேண்டும். இரத்தம் கொஞ்சம் வெந்த பிறகு அதில் சிறிது மிளகுத் தூள், சீரகத் தூள் சேர்த்து மீண்டும் கிளறி விட வேண்டும். 

மசாலாக்களின் காரத் தன்மை சென்ற பிறகு , இறுதியாக தேங்காய் துருவலை சேர்த்து ஒரு முறை கிளறி அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். அடுத்து பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவி பரிமாறினால் சூப்பரான ஆட்டு ரத்த பொரியல் ரெடி!

click me!