Cabbage: அடிக்கடி முட்டைகோஸ் சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் இதோ!

By Dinesh TGFirst Published Dec 9, 2022, 3:19 PM IST
Highlights

முட்டைகோஸ் மிகவும் சுவையானது மட்டுமின்றி, உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்க வல்லது.
 

உலகில் பல பகுதிகளில் கிடைக்கும் ஒரு உணவுப் பொருள் தான் முட்டை கோஸ். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கும். கி.மு.200 ஆம் ஆண்டில் ரோமானியர்கள் மற்றும் கிரேக்கர்கள் முட்டைகோஸைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது வரலாற்றில் பதிவாகி இருக்கிறது. முட்டைகோஸ் மிகவும் சுவையானது மட்டுமின்றி, உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்க வல்லது.

முட்டைகோஸில் உள்ள சத்துக்கள்

ஒரு கிண்ணம் அளவு முட்டைகோஸில், தினந்தோறும் நம் உடலுக்குத் தேவையான விட்டமின் சி-யில் மூன்றில் ஒரு பாகம் கிடைக்கின்றது. முட்டைகோஸின் மேற்புறம் இருக்கும் பச்சை வண்ண இலைகளில் வைட்டமின் ஏ மற்றும் இரும்பு சத்து மிக அதிகமாக உள்ளது.

கண்புரையைத் தடுக்கும்

வாரத்திற்கு 3 முறையாவது முட்டைகோஸை சாப்பிட்டு வந்தால், குடல் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது.

அல்சரை குணப்படுத்தும் குளுட்டமைல், முட்டை கோஸில் அதிகளவில் நிரம்பியுள்ளது. ஆகையால், அடிக்கடி முட்டைகோஸை சாப்பிட்டால் அல்சர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிகளவில் நிறைந்துள்ளது. இது கண்புரையைத் தடுக்க உதவுகிறது.

அல்சைமர்

சிவப்பு வண்ண முட்டைகோஸை சாப்பிட்டால், அல்சைமர் நோயைத் தடுக்கலாம் என ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முட்டைகோஸில் இருக்கும் அதிகளவிலான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பாதிப்பை குணமாக்குகிறது.

மூளை ஆரோக்கியம் 

முட்டைக்கோஸ் மூளையை மிக ஆரோக்கியமாக செயல் பட வைக்கிறது. இதில் இருக்கும் விட்டமின் கே மற்றும் அந்தோசயனின்கள், மனதின் செயல்பாடுகளீ மற்றும் கவனம் செலுத்துவதை ஊக்குவிக்க உதவுகிறது. நரம்பு செல்களை சேதத்தில் இருந்து பாதுகாப்பதற்கு விட்டமின் கே மிகவும் முக்கியம் ஆகும். மூளைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்தான அயோடினின் சிறந்த மூலம் முட்டகோஸ் ஆகும்.

Hip Pain: இடுப்பு வலியை குறைக்க உதவும் சூப்பர் பானம்: குடிச்ச உடனே நிவாரணம் கிடைக்கும்!

எலும்பு ஆரோக்கியம்

உடலில் வலுவான எலும்புகளை உருவாக்கத் தேவையான ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலம் இந்த முட்டைகோஸ். இவை எலும்புகளை வலுப்படுத்த தேவையான மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. இதுதவிர, முட்டைக்கோஸ் சாப்பிட்டால் எலும்புப்புரை போன்ற நோய்களைத் தடுக்க முடியும்.

நோய் எதிர்ப்பு சக்தி

முட்டைகோஸில் விட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் நிரம்பியுள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்கிறது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவது மட்டுமின்றி, பல விதமான நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவி புரிகிறது.

click me!