5 பச்சை இலைகளைப் பயன்படுத்துவதன் மூலம் ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டு (ரத்த அணுக்கள்) அதிகரிக்கலாம்.
பருவமழை தொடங்கி உள்ள நிலையில் நாடு முழுவதும் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாகப் பரவுகிறது. கொசுக்களால் பரவும் இந்த டெங்கு காய்ச்சலால், ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் அதாவது ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவதால் ரத்தப்போக்கு அதிகரிக்கும். ஆனால் 5 பச்சை இலைகளைப் பயன்படுத்துவதன் மூலம் ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டு (ரத்த அணுக்கள்) அதிகரிக்கலாம்.
பிளேட்லெட் குறைபாட்டின் அறிகுறிகள்: டெங்கு பாதிப்பின் போது பிளேட்லெட்டுகள் குறைவாக இருப்பது பொதுவானது, இது வெட்டுக்காயங்கள் அல்லது காயங்களால் நீடித்த இரத்தப்போக்கு, மூக்கில் இருந்து இரத்தப்போக்கு, ஈறுகளில் இருந்து இரத்தப்போக்கு, சிறுநீர் அல்லது மலத்தில் இரத்தப்போக்கு, சோர்வு, அதிக மாதவிடாய், இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே வீட்டில் இருந்தே ரத்த பிளேட்லெட்களை எப்படி அதிகரிப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
“ 48 மணி நேரத்தில் கோமா நிலை கூட ஏற்படலாம்..” நிபா வைரஸின் 3 ஆபத்து காரணிகள் என்னென்ன தெரியுமா?
பப்பாளி இலை
பப்பாளி இலைகளை டெங்குவுக்கு ஒரு சிறந்த சிகிச்சையாக கருதப்படுகிறது. பப்பாளி இலைகளை கஷாயம் செய்து தினமும் இரண்டு வேளை குடிக்கலாம். இது பிளேட்லெட்டுகளை விரைவாக அதிகரிக்கவும், காய்ச்சலை குறைக்கவும் உதவும். இது மிகவும் அதிசயமான ஆயுர்வேத செய்முறையாகும்.
கொய்யா இலை
டெங்கு வைரஸை அழிக்கும் தன்மைகொய்யா இலைக்கு உண்டு. இந்த பச்சை இலைகளில் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. சிறிது கொய்யா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, பாதியாக குறையும் வரை கொதிக்க விடவும். இறக்கி, தேன் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை குடிக்கலாம்.
வேம்பு
நோய்த்தொற்றுகளை நீக்குவதில் வேப்ப இலைகள் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் டெங்கு பாதிப்பைக் குறைக்கவும், பிளேட்லெட்டுகளை அதிகரிக்கவும் உதவும். இந்த மருந்தை தயாரிக்க வேப்ப இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கவும்.
நில வேம்பு :
நில வேம்பு இலைச்சாற்றின் பண்புகளை அறிய பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. டெங்குவில் இருந்து மீள உதவும் ஆன்டிவைரல் பண்புகள் அவற்றில் காணப்படுகின்றன. இந்த இலைகள் மற்ற வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன. அவற்றின் டிகாஷன் செய்து குடிக்கலாம்.
பிரியாணி இலை
உணவின் சுவையை அதிகரிக்க பிரியாணி இலைகள் சேர்க்கப்படுகின்றன. இதை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால், ரத்த தட்டுக்களை அதிகரித்து டெங்குவை குணப்படுத்தலாம். மருத்துவ ஆலோசனையின் பேரில் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை சாப்பிடலாம். ஆனால் எந்த சூழ்நிலையிலும் மருத்துவர் கொடுக்கும் மருந்தை புறக்கணிக்க கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இதை மருந்தாக அல்லது சிகிச்சையாக கருதக்கூடாது. மேலும் தகவலுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.