பற்களில் இருக்கும் மஞ்சள் கரையை போக்க இதைவிட சூப்பர் டிப்ஸ் கிடைக்காது...

 
Published : May 22, 2018, 01:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
பற்களில் இருக்கும் மஞ்சள் கரையை போக்க இதைவிட சூப்பர் டிப்ஸ் கிடைக்காது...

சுருக்கம்

There is no super tips available to get rid of the yellow shade in the teeth ...

பலரும் பல டூத் பேஸ்ட்டை பயன்படுத்தியும் இந்த பற்களின் மஞ்சள் கரையை போக்க முடியாமல் தவிப்பதுண்டு. சிலர் எதுவும் வேலைக்கு ஆகவில்லை எனில், நேராக பல் மருத்துவரிடம் சென்று செயற்கை முறைகளை பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள்.

கவலையை விடுங்கள்! இந்த எளிய இயற்கை முறையில் பற்களில் படிந்திற்கும் மஞ்சள் கறையை போக்க முடியும். 

** இயற்கையான மஞ்சளை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  உங்கள் டூத் பிரஷை ஈரப்படுத்தி எடுத்துக் கொள்ளுங்கள். மிக குறைவான அரை கால் பங்கு (1/8) மஞ்சள் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு மஞ்சளை தொட்டு மென்மையாக பிரஷ் செய்யுங்கள்.

** உடனே வாய் கழுவிவிட கூடாது. பிரஷ் செய்த பிறகு 3-5 நிமிடங்கள் அந்த மஞ்சள் பற்களில் இருக்கும் படி பேசாமல் அமைதியாக உட்கார்ந்துக் கொள்ளுங்கள்.

** 5 நிமிடங்கள் கழித்து நன்கு வாய் கொப்பளித்து கழுவி கொள்ளவும். பிறகு சாதாரண பல் போடி அல்லது டூத் பேஸ்ட் பயன்படுத்தி மீண்டும் பல் துலக்குங்கள். இது வாயில் வீசும் அந்த மஞ்சளின் வாசம் போவதற்கு உதவும்.

** தொடர்ந்து ஒரு வாரம் இதை பின்பற்றி வந்தால் பற்களில் படிந்திருக்கும் அந்த மஞ்சள் கறையை எளிதாக போக்கிவிடலாம். நீங்கள் இதை பின்பற்றிய முதல் நாளிலேயே மாற்றத்தை உணர முடியும்.

தேவையான பொருட்கள்

1/4 டீஸ்பூன் இயற்கை மஞ்சள் பொடி

1/8 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்

செய்முறை

மஞ்சள் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய்யை பேஸ்ட் போன்று குழைத்து கொள்ளுங்கள். வெறுமென தண்ணீர் கலந்து பயன்படுத்துவதை விட இது இன்னும் சிறந்த பயனளிக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில், தேங்காய் எண்ணெயும் சிறந்த இயற்கை சுத்திகரிப்பு மூலப்பொருள் ஆகும்.

தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி ஆயில் புல்லிங் செய்து வந்தாலும் கூட வாய் துர்நாற்றம், பற்களில் மஞ்சள் கறை போன்றவற்றில் இருந்து சீரிய முறையில் தீர்வுக் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

Winter Hair Care : குளிர்காலத்துல ஒரு முடி கொட்டாம அடர்த்தியாக வளரனுமா? அப்ப இந்த எண்ணெய்ல ஒன்னு தேய்ங்க!
Weight Loss : சியா விதை நீரா? சீரக தண்ணீரா? உடல் எடையை விரைவில் குறைக்க எது பெஸ்ட்?