உங்களுக்கு தெரியுமா? விஷத்தை முறிக்கும் மிளகில்கூட நம்ப முடியாத அளவுக்கு பக்க விளைவுகள் இருக்கு...

 
Published : May 22, 2018, 01:01 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
உங்களுக்கு தெரியுமா? விஷத்தை முறிக்கும் மிளகில்கூட நம்ப முடியாத அளவுக்கு பக்க விளைவுகள் இருக்கு...

சுருக்கம்

Do you know There are side effects that are unbelievable even when the poison breaks the pea ...

மிளகினை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் இதோ...

** அதிகமாக மிளகை உணவில் சேர்ப்பதன் மூலம், வயிற்றில் எரிச்சல் மற்றும் எப்பொதும் அசௌகரியத்தை உணரக்கூடும். எனவே மிளகை அளவாக உணவில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

** மிளகை அதிகமாக சாப்பிட்டு வந்தால், அது கண் சிவப்பு, கண் அரிப்பு மற்றும் கண் எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

** உணவில் மிளகை அதிகமாக சேர்த்தால், இரைப்பை மற்றும் உணவுக்குழாய் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதோடு, நுரையீரலின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

** தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அதிகமாக மிளகு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அது தாய்ப்பாலின் சுவையை மாற்றுவதோடு, குழந்தைக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

** நாம் சாப்பிடும் உணவில் மிளகை அதிகம் சேர்த்து சாப்பிட்டால், சுவாச பிரச்சனை, தொண்டையில் எரிச்சல், ஆஸ்துமா போன்ற இதர சுவாச பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

** வறட்சியான சருமத்தை கொண்டவர்கள் மிளகுத் தூளை அதிகமாக உணவில் சேர்க்கக் கூடாது. ஏனெனில் அது அவர்களுக்கு சரும வறட்சியை அதிகரித்து, தோல் உரிதல் போன்ற பல்வேறு சருமப் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

** கர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள் மிளகை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அவர்கள் மிகுந்த அசௌகரியத்தை உணர்வதுடன், சிலநேரத்தில் அது கருச்சிதைவைக் கூட ஏற்படுத்தும்.

PREV
click me!

Recommended Stories

Winter Hair Care : குளிர்காலத்துல ஒரு முடி கொட்டாம அடர்த்தியாக வளரனுமா? அப்ப இந்த எண்ணெய்ல ஒன்னு தேய்ங்க!
Weight Loss : சியா விதை நீரா? சீரக தண்ணீரா? உடல் எடையை விரைவில் குறைக்க எது பெஸ்ட்?