Chickpeas : கைப்பிடி அளவு உப்புக்கடலையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கா!

By Dinesh TG  |  First Published Sep 26, 2022, 4:50 PM IST

கருப்பு கொண்டைக்கடலையை உப்பு மட்டும் கலந்து, வறுத்து எடுப்பது தான் உப்புக்கடலை. இந்த உப்புக்கடலை மிகச்சிறந்த, உடலுக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ். இதில் புரதச்சத்து, நார்ச்சத்து உள்ளிட்ட நிறைய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது.


உடல் எடை குறையும்

உப்புக்கடலையில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் இருக்கிறது. நார்ச்சத்துக்களை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்வதன் மூலமாக செரிமான சக்தி அதிகரித்து, மெட்டபாலிசம் அதிகரிக்கும். இதனால், உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகள் கரையத் தொடங்கி, உடல் எடையும் குறைய தொடங்கும்.  

Tap to resize

Latest Videos

நீரிழிவு பிரச்சினை

கொண்டைக்கடலையின் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவு என்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாகிறது. கொண்டைக்கடலையின் கிளைசெமிக் குறியீடு 28 தான். இதனால் உப்புக்கடலை, நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்த ஸநாக்ஸாக இருக்கும்.

Weight Loss Tips : உடல் எடையை குறைக்கும் பாப்கார்ன்: காரணம் இது தான்!

இதய ஆரோக்கியம்

உப்புக்கடலையில் மாங்கனீசு, ஃபோலேட் சத்து, பாஸ்பரஸ் மற்றும் செம்புச்சத்து ஆகியவை அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த சத்துக்கள் நம்முடைய இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. உப்புக்கடலையில் உள்ள பாஸ்பரஸ் நம்முடைய உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து, இதயம் தொடர்பான பிரச்சினையை தவிர்க்க உதவுகிறது.

Gas trouble : வாயுப் பிடிப்பு வரக் காரணம் என்ன? அதற்குத் தீர்வு தான் என்ன?

உறுதியான எலும்புகள்

உப்புக்கடலையில் உள்ள பலவிதமான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இணைந்து, உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக வைத்திருக்கச் செய்யும். இதில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீசு ஆகியவை எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. மூட்டு வலி முதல் எலும்பு சம்பந்தமான தொற்றுகள் மற்றும் எலும்பு புற்றுநோய் போன்ற பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க இந்த வறுத்த கொண்டைக்கடலை உதவுகிறது.

click me!