Gas trouble : வாயுப் பிடிப்பு வரக் காரணம் என்ன? அதற்குத் தீர்வு தான் என்ன?
நம்மில் சிலருக்கு மதிய வேளையில் முழு சாப்பாடு சாப்பிட்ட உடனே சிறுகுடலில் வாயுப் பிடிப்பு உண்டாகும். இது எதனால் ஏற்படுகிறது என்று பலருக்கும் தெரிவதில்லை. இந்த வாயுப் பிடிப்பு எதனால் ஏற்படுகிறது மற்றும் இதற்கான தீர்வை நாம் இங்கு பார்ப்போம்.
வாயுப் பிடிப்பு
வாயுப் பிடிப்பு என்பது உணவு செரிமானத்தின் போது, சிறுகுடலில் உண்டாகும் ஒருவித கோளாறு. நாம் சாப்பிடும் உணவானது, வயிற்றில் சுரக்கின்ற செரிமான அமிலத்தால் எரிக்கப்பட்ட பின்பு, குடலுக்குத் தள்ளப்படுகிறது. அமிலத்தின் வினையால் உண்டாகும் வாயுவானது, சிறுகுடலின் வழியாக மலக்குடலை நோக்கிச் செல்லும்.
அதிக கொழுப்பு, மாவு மற்றும் வெற்று கலோரிகள் நிறைந்த உணவைச் சாப்பிடும் போது, செரிமானம் அடைய தாமதம் ஆகிறது. இதனால், செரிமான வாயுவின் அளவும் அதிகரிக்கிறது. இதன் விளைவாக குடல் வீக்கம் ஏற்படுகிறது. குடல் வீக்கத்தால் வயிற்று வலி, ஏப்பம், வாயுத் தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது. சில சமயங்களில் குடல் வீக்கத்தை அடுத்து, இந்த வாயுவானது அடிமுதுகில் தசைப்பிடிப்பை உண்டாக்குகிறது. குறிப்பாக உடல் எடை அதிகமுள்ளவர்களுக்கு இந்த பிரச்னை அதிகரிக்கத் தொடங்கும்.
Weight Loss Tips : உடல் எடையை குறைக்கும் பாப்கார்ன்: காரணம் இது தான்!
வாயுப் பிடிப்பு பிரச்னையில் இருந்து தப்பிக்க நினைப்பவர்கள், கார்பனேட்டட் பானங்களை அருந்தக் கூடாது. இந்த பாசனத்திற்கு பதிலாக சாப்பாட்டில் இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். மேலும், நார்ச்சத்து அதிகம் நிறைந்த கீரை வகைகள் மற்றும் பழங்கள் ஆகியவை வாயுத் தொல்லையைப் போக்க வல்லது. லெமன் டீ, கிரீன் டீ உள்ளிட்ட டீடாக்ஸ் பானங்களை அருந்தியும் பலன் பெறலாம்.