
மணத்தக்காளி கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான சத்துக்கள் நிறைந்திருப்பதோடு மட்டுமல்லாமல் பல மருத்துவப் பண்புகளையும், கொண்டுள்ளது.
எனவே தான் சித்தா ஆயுர்வேத மருத்துவத்தில் மணத்தக்காளி கீரை உபயோகப்படுத்துகிறார்கள்.
மணத்தாக்காளி கீரையில்
புரதம் (5.9 %), கொழுப்பு (1.0%) சுண்ணாம்பு (210 மி.கி.) பாஸ்பரஸ் (75 மி.கி) இரும்புச்சத்து (20.5 மி.கி) ஆகியன உள்ளன.
மருத்துவ குணங்களான கிளைக்கோ ஆல்கலாய்டு (2.70 %), டானின் (3.60%), சப்போனின் (9.10%), மொத்த ஆல்கலாய்டு (2.48%) ஆன்டி-ஆக்ஸிடெண்ட் ஆக்டிவிட்டி (59.37%) முதலியவையும் உள்ளன.