
1.. கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, முருங்கைக்கீரை, கடுக்காய்த்தோல், பீட்ரூட், வாழைப்பூ, நெல்லிக்காய், பேரீச்சம்பழம், மாதுளம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி முதலியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் ரத்தம் பெருகும்.
2.. காலையில் வெறும் வயிற்றில் கரிசலாங்கண்ணி இலைகள் ஐந்தும் ஒரு மிளகும் சேர்த்து மென்று சாப்பிட்டு ஒரு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். அதன்பிறகு இரண்டு மணிநேரம் வேறு எந்த உணவும் உண்ணக் கூடாது. இவ்வாறு குறைந்தபட்சம் 1 1/2 மாதங்கள் சாப்பிட்டால் ரத்தத்தின் தரம் உயரும்.
3.. கரிசலாங் கண்ணி இலைகளுடன் தேங்காய், பருப்பு சேர்த்து கூட்டாகவும் செய்து சாப்பிடலாம்.
4.. ரத்தத்தைப் பெருக்கிட கரிசலாங்கண்ணி ஒன்றே போதும்.