கோடையில் சருமம் கருத்துவிட்டதா? கவலை வேண்டாம் கருமை நீங்க இதோ எளிய வைத்தியம்…

 
Published : May 25, 2017, 12:39 PM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
கோடையில் சருமம் கருத்துவிட்டதா? கவலை வேண்டாம் கருமை நீங்க இதோ எளிய வைத்தியம்…

சுருக்கம்

Did you see the skin in the summer? Do not worry

1.. அரிசி மாவுடன் தயிர் கலந்து சருமத்தில் தடவி மேல்நோக்கி மசாஜ் செய்து ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் முகம் கருமை நீங்கி பளபளப்பாகும்.

2.. ஒரு டேபிள் ஸ்பூன் தயிருடன் ப்ரெஷ்ஷான எலுமிச்சை சாறையும், தேனையும் கலந்து சருமத்தில் தடவி சிறிதுநேரம் கழித்து கழுவ வேண்டும்.  இது முகத்தில் உள்ளகருமை நீங்க உதவும்.

3.. உருளைக்கிழங்கைச் சாறெடுத்து அதை வெயிலினால்உண்டான கருமையில் தடவலாம். அதனுடன் எலுமிச்சைசாறு கலந்தும் தடவலாம்.

4.. வெள்ளரிக்காயை கொழகொழவென அரைத்து அதனுடன்எலுமிச்சை சாறும், முல்தானிமட்டி கலந்து முகத்தில் 15நிமிடம் ·பேஸ்பேக் போட வேண்டும். வெயில் கருமையை நீக்குவதற்கு இது மிகவும் உகந்த முறை..

5.. நல்லெண்ணை, ஆலிவ் எண்ணை, பாதாம் எண்ணைஆகியவற்றை 4: 1: 1 என்ற விகிதத்தில் கலந்து சருமத்தில் பூச வேண்டும். இருபது நிமிடம் கழித்து பாசிப் பயிறு மாவுகொண்டு இளம் சூடான நீரில் கழுவினால் சரும நிறம் பொலிவு பெறும் .

6.. தயிருடன் தக்காளிச் சாறைக் கலந்து சருமத்தில் பூசி இருபது நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும்.

7.. சிறிதளவு எலுமிச்சை சாற்றில் பாசிப்பருப்பு மாவும், தயிரும்கலந்து பூசி பதினைந்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

Fish Eggs Benefits : மீனை விட 'மீன் முட்டை' ரொம்ப நல்லதாம்!! ஆனா 'இவங்க' மட்டும் சாப்பிடவே கூடாது
Knee Pain Relief Tips : தாங்கவே முடியாத மூட்டுவலிக்கும் 'நிவாரணம்' அளிக்கும் எளிய வழிகள்; ஒருமுறை செஞ்சு பாருங்க