முத்தம் தருவதிலும் பெறுவதிலும் இவ்வளவு நன்மைகள் இருக்கா..?? இது தெரியாம போச்சே..!!

By Dinesh TGFirst Published Oct 2, 2022, 12:50 PM IST
Highlights

பிறர் மீதான அன்பையும் காதலையும் வெளிப்படுத்த நாம் முத்தமிடுகிறோம். இந்த செய்கை மனித இனத்துக்கு மட்டுமே உரியது. ஒருவருக்கு முத்தமிடும் போது, அவருடன் உள்ள இணைப்பு மற்றும் நெருக்கத்தை பல மடங்கு அதிகரிக்கச் செய்கிறது. வெறும் காதல் மட்டுமில்லாமல் பரிவு, பாசம், நட்பு மற்றும் உறவை வெளிப்படுத்துவதற்கும் முத்தம் முக்கிய செயல்பாடாக உள்ளது. மனிதனின் செயல்பாட்டில் முத்தம் சாதாரண செய்கையாக இருக்கலாம். ஆனால் உறவுக்கு இடையில் அந்த முத்தம் பல்வேறு அதிசியங்கள் நிகழ்வதற்கு ஆர்மபப்புள்ளியாக உள்ளது. குறிப்பாக காதலர்களுக்கும் தம்பதிகளுக்கும் முத்தம் அன்பின் பரிமாற்றமாக உள்ளது. முத்தமிடுவது சாதாரண செய்கையாக மட்டுமில்லாமல், அதில் பல்வேறு ஆரோக்கியம் மற்றும் மனநலம் சார்ந்த நன்மைகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதுகுறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
 

நெருக்கம் நெருங்கி வரும்

காதலை வெளிப்படுத்திய பிறகு ஒவ்வொருவரும் துணையிடம் இருந்து முத்தம் பெறுவதற்கு தான் பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. காதலி காதலனுக்கு தரும் அந்த முத்தம் அவர்களுடைய உறவை உறுதி செய்கிறது. தாய் குழந்தைக்கு தரும் முத்தம் உறவை விரிவடையச் செய்கிறது. குழந்தை வளர்ந்த பின், அது தாயிக்கு தரும் முத்தம் வாழ்க்கையில் இன்பத் தத்துவத்தை எடுத்துரைக்கிறது. துணையுடனான பிணைப்பை வலுப்படுத்தும் முத்தம், அவர்களுக்கிடையிலான ஆழமான உணர்வுகளை பரிமாறிக் கொள்ள உதவுகிறது. இதன்மூலம் அவர்களுடைய நெருக்கம் இன்னும் நெருங்கி வருகிறது. அதன்மூலம் புதிய வாழ்க்கை பிறக்கிறது.

மன அழுத்தத்தை போக்குகிறது

முத்தமிடுவதன் மூலம் நமது உடலில் ஆக்ஸிடோஸின் மற்றும் டோபமைன் போன்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இதன்மூலம் நமக்கு நல்ல எண்ணங்கள் மனதுக்குள் எழுகின்றன. அதனால் இவையிரண்டையும் ஆங்கிலத்தில் ‘ஃபீல் குட்’ ஹார்மோன்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த ஹார்மோன்கள் உடலுக்குள் சுரக்கும் போது மன அழுத்தம் குறைகிறது. சவால் நிறைந்த வாழ்க்கையில் நம் துணையிடமிருந்து தினசரி ஒரு முத்தம் கிடைத்தால், அந்நாளைவே நாம் வெற்றிக்கொள்ளலாம். முத்தமிடுவது போன்ற எளிமையான செயல்கள், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்னைகளில் இருந்து உங்களை மீட்டெடுக்கும்.

உடலுறவில் நாட்டமில்லாத கணவரை வழிக்கு கொண்டுவருவது எப்படி?

உறவுகளுக்குள் நம்பிக்கை மலரும்

உறவுகளுக்கு இடையில் நம்பிக்கை மிகவும் முக்கியம். கணவன் மனைவிக்கு இடையே உறவு உறுதியுடன் இருப்பதற்கு முத்தம் அவசியம். அதன்மூலம் கிடைக்கும் நம்பிக்கை தான், எதிர்கால வாழ்க்கையை ஒன்றாக சந்திக்க வித்திடுகிறது. தாயிடம் சேய் பாதுகாப்பாக உணவருவதற்கு காரணம் முத்தம் தான். அந்த நம்பிக்கையின் மூலம் ஒவ்வொரு நாளும் நம்மை கவனிக்கவும், ஆதரிக்கவும், நேசிக்கவும் ஒருவர் இருக்கிறார் என்கிற எண்ணத்தை உருவாக்கும். நல்ல உறவின் அறிகுறி என்பது உண்மையும், நேர்மையும் தான். அது நம்பிக்கையின் மூலமாகவே தெரியவரும்.

முகத்தில் மேக்கப் போடுவதற்கு முன்பு சருமத்தை தயார் செய்யும் வழிமுறைகள்..!!

வாழ்க்கையின் மீது சுவாரஸ்யம் உருவாகும்

மனிதனிடையே நிலவும் விசித்திரமான செயல்பாடு தான் முத்தம். அதை இயல்பாகவும் எடுத்துக் கொள்ள முடியாது, அதே சமயத்தில் விசித்திரம் நிறைந்தது என்றும் கூறிவிட முடியாது. திடீரென்று உடலுக்குள் ஏற்படும் ஒரு மேஜிக்கை நாம் முத்தத்தின் வழியாக வெளிப்படுத்துகிறோம். அதை வெளிப்படுத்தும் போது பெண் காதலியாகிவிடுகிறாள், பகைவன் நண்பனாகிவிடுகிறான், குழந்தை மகன் அல்லது மகளாகிவிடுகின்றனர். உடல் சார்ந்த உணர்வையும் மறைத்து வைத்திருக்கும் அன்பையும் முத்தத்தின் வழியாகவே மீட்டெடுக்க முடியும். அந்த சுவராஸ்யம் எப்படி ஏற்படுகிறது என்பது, இருவருக்குமிடையே பரிமாறப்படும் முத்தத்துக்கு மட்டுமே தெரியும்.

click me!