
தண்ணீர் கீரை
தண்ணீர் கீரை ஆரோக்கியம் தருவதோடு மட்டுமல்லாமல் தோல் மற்றும் முடி பிரச்சனைகளையும் சரி செய்யும்.
சத்துகள்:
தண்ணீர் கீரையில் வைட்டமின், தாதுக்கள் அதிகளவு கொண்டுள்ளதால் மிகச்சிறந்த கீரையாக விளங்குகின்றது.
இந்தக் கீரையில் மிகச்சிறந்த வளங்களாக நார்சத்து உணவுகள், புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ மற்றும் சி யை கொண்டுள்ளது.
நன்மைகள்
1.. எடை பிரச்சனையால் அவதி படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிக எடையுடன் அவதி படுபவர்கள் தங்கள் எடையை இயற்கையாகவே கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள தண்ணீர் கீரையை சாப்பிடலாம்..
தண்ணீர் கீரை கொழுப்பை குறைத்து எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும். ஆதலால் தண்ணீர் கீரையை சூப் செய்தோ, சமைத்தோ எடுத்துக்கொள்ளலாம்.
2.. மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பிரச்சனைகளுக்கு சிகிச்சைக்காக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தபடுகிறது தண்ணீர் கீரை.
3.. ரத்தசோகையால் அவதிபடுபவர்கள் தண்ணீர் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் தண்ணீர் கீரை இரும்பு சத்துகளை அதிகளவு கொண்டுள்ளதால் ரத்தசோகைக்கு எதிராக செயல்படும்.
4.. கர்ப்பிணிபெண்கள் கீரையை சேர்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில் உடலுக்கு தேவையான ரத்த அணுக்களை உருவாக்கி ஹீமோகுளோபினை அதிகப்படுத்தும் முக்கிய பொருளாக இக்கீரை உள்ளது..
5.. ஃபைபர் சத்துகளை அதிகளவு கொண்டுள்ள தண்ணீர் கீரை செரிமானக் கோளாறுகளுக்கு நிவாரணம் வழங்குவதில் சிறந்து விளங்குகிறது.
6.. மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனையால் அவதி படுபவர்கள் கீரையை வேகவைத்த தண்ணீரை வடிகட்டி பருகினால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
7.. குடல் புழுக்கள், வயிறு பிரச்சனைக்கு இது பேதி மருந்தாகவும் பயன்படுகிறது.
வாரத்தில் மூன்று நாட்கள் கீரையை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்வது நல்லது.