சோளத்தில் அடங்கியுள்ள மருத்துவ பண்புகள் இதோ…

 
Published : Jun 01, 2017, 12:49 PM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
சோளத்தில் அடங்கியுள்ள மருத்துவ பண்புகள் இதோ…

சுருக்கம்

the medical properties corn

சோளத்தின் மருத்துவ பயன்கள்:

1.. நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.

2.. சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.

3.. கண் குறைபாடுகளை சீர் செய்யும் 'பீட்டா கரோட்டின்', இதில் அதிகமாக உள்ளது.

சோளத்தை கொண்டு செய்யப்படும் நவதானிய தோசை:

தேவையானவை:

வெள்ளை சோளம் - கால் கப்,

பாசிப்பயறு - கால் கப்,

கருப்பு உளுத்தம்பருப்பு - கால் கப்,

கொண்டைக்கடலை - கால் கப்,

பச்சரிசி - கால் கப்,

துவரம்பருப்பு - கால் கப்,

கொள்ளு - கால் கப்,

சோயா - கால் கப்,

எள்ளு - ஒரு டேபிள்ஸ்பூன்,

பச்சை மிளகாய் - 3,

காய்ந்த மிளகாய் - 6,

இஞ்சி - ஒரு துண்டு,

தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,

கறிவேப்பிலை - சிறிது,

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - தேவையான அளவு,

பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு.

செய்முறை:

எல்லா தானியங்களையும் ஒன்றாக போட்டு நன்றாகக் களைந்து சுமார் 5 மணி நேரம் ஊறவைக்கவும்.

ஊறிய பிறகு தானியங்கள், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

பொடியாக அரிந்த கொத்துமல்லியை சேர்த்து மெல்லிய தோசைகளாக வார்த்து எடுக்கவும்.

இஞ்சி சேர்ப்பதால் எளிதில் ஜீரணமாகும்.

தோசையாக செய்வதால் குழந்தைகளுக்கும் கொடுத்து அவர்களுக்கு ஆரோக்கியத்தை அளித்த திருப்தியை அம்மாக்கள் அடையலாம்.

PREV
click me!

Recommended Stories

Kidney Stone Symptoms : உங்க கிட்னில கல்லு இருக்குனு காட்டுற '4' அறிகுறிகள் இவைதான்; இதை அலட்சியம் பண்ணாதீங்க!
Winter Hair Fall : வெந்தயத்தை இப்படியும் யூஸ் பண்ணலாமா? குளிர்கால முடி உதிர்வைத் தடுக்க சூப்பர் வழி