சாமை அரிசியை சாப்பிட்டு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்

Asianet News Tamil  
Published : Jun 01, 2017, 12:45 PM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
சாமை அரிசியை சாப்பிட்டு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்

சுருக்கம்

sugar patients can control the sugar by eating saamai rice

“நோய் நாடி நோய் முதல் நாடி" என்கிறது வள்ளுவம். வள்ளுவம் மட்டுமல்ல அனைத்து பாரம்பரிய வைத்திய முறைகளும் நோயினை வேரோடு பிடுங்கவே முயற்சிக்கின்றன.

உள்ளுறுப்புத் திறன்பட வேலை செய்ய வேண்டும், அதற்கு நூண்ணுட்டங்கள் அவசியம். இதற்க்காக எங்கேயும் தேடித் திரிய வேண்டியதில்லை, நம் சமையலறையே போதும், ஆனால் எவ்வகை உணவு என்பதில் சிறிய கவனம் தேவை. அந்த வரிசையில் சிறுதானியங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

புஞ்சைத் தாவரங்களில் (சிறுதானியங்கள்) சிறப்பிற்குரிய தானியமாக கருதப்படுவது சாமை.

சர்க்கரை நோயளிகள் அதிகம் உள்ள நாடாக இந்தியா கருதப்படுகிறது. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்குவகிப்பது நார்சத்து.

நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. இதனை உணவாக உட்கொள்ளும் போது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திடவும் முடியும்.

சாமையில் இரும்பு சத்து அளவிட்டால் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் அதிகம். இது இரத்தசோகை வருவதற்கான வாய்பினைக் குறைக்கிறது. இளம் பெண்களின் முக்கிய உணவாக சாமை அமைவது அவசியமான ஒன்று.

பொதுவாக முதியவர்களுக்கும், நோய்வாய்பட்டவர்களுக்கும் மலச்சிக்கல் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. உடம்பிலிருந்து கழிவுகள் சரிவர வெளியேரவில்லை என்றாலே அது மற்ற நோய்களுக்கு மூல காரணியாக அமைந்து விடும்.

சாமை சோறு, சாமை பொங்கல், சாமை இட்லி, சாமை தோசை, சாமை உப்புமா, சாமை இடியாப்பம், சாமை புட்டு இவ்வாறு சாமை அரிசியில் செய்த பதார்த்தங்களை பசித்த பின்னர் உட்கொள்ளும் போது நோய்களுக்கெள்ளாம் மூலமாக கருதப்படும் மலச்சிக்கலிருந்து விடுபட முடியும்.

இதுமட்டுமல்லாமல் வயிற்றுக் கோளறுக்கு சாமை அரிசி நல்லதொரு மருந்தாகவும் திகழ்கிறது. தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு குறிப்பிடத்தக்கது.

இக்காலத்தில், அதிக அளவு தேவையில்லாத கொழுப்பையும், சர்க்கரை பொருட்களையும் தரும் பீட்சா, பர்கர் மற்றும் மைதா பொருட்களை உண்பதைத் தவிர்த்து இம்மாதிரியான பாரம்பரிய தானியங்ளில் செய்த உணவினை உட்கொள்ளும் போது உடல் உரிதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பது நிச்சையம்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake