நீங்கள் நினைத்து பார்த்திராத அளவுக்கு பூண்டில் மருத்துவ குணங்ககள் இருக்கு…

 
Published : Apr 06, 2017, 02:39 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
நீங்கள் நினைத்து பார்த்திராத அளவுக்கு பூண்டில் மருத்துவ குணங்ககள் இருக்கு…

சுருக்கம்

The medicinal qualities of garlic are seen as much as youd think

பூண்டை அன்றாட உணவில் சேர்த்தும் சாப்பிடலாம் அல்லது வெறும் வயிற்றிலும் சாப்பிடலாம் அல்லது இரவில் படுக்கும் முன் கூட சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் பூண்டில் நிறைந்துள்ள ஏராளமான மருத்துவ குணங்கள் நன்மையை மட்டுமே தரும்.

பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

1.. தினமும் இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால், உடலினுள் இரத்த உறைவு ஏற்பட்டு, இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவது தடுக்கப்படும்.

2.. சளி அல்லது இருமலால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால், சளி மற்றும் இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம்.

3.. பூண்டு வாய்வுத் தொல்லையில் இருந்து விடுதலை அளிக்கும். ஆனால் அதற்காக பூண்டை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. எனவே வாய்வு தொல்லை அதிகமாக இருந்தால், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுங்கள்.

4.. பூண்டில் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. ஒருவர் இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால், புற்றுநோயின் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.

5.. காது அல்லது பாதங்களில் பூஞ்சை தொற்றுகள் இருந்தால், ஒரு பூண்டை நன்கு அரைத்து, அதன் சாற்றினை அவ்விடத்தில் விடுங்கள். இதனால் பூஞ்சை தொற்று விரைவில் போய்விடும்.

6.. இதய குழாயான தமனிகளில் கொழுப்புக்கள் படிந்து அடைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவது நல்லது.

PREV
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!