உங்களுக்குத் தெரியுமா? வெங்காயத்தை நறுக்கி தீக்காயங்கள் மீது வைத்தால் விரைவில் ஆறிவிடும்…

 
Published : Apr 06, 2017, 02:36 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
உங்களுக்குத் தெரியுமா? வெங்காயத்தை நறுக்கி தீக்காயங்கள் மீது வைத்தால் விரைவில் ஆறிவிடும்…

சுருக்கம்

Did you know? Cut the onion and put on burns burns will heal quickly

வெங்காயத்தில் என்ன இருக்கு?

வெங்காயத்தில் அதிகபடியான ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி, எதிர்ப்புகள் மற்றும் ஆண்டிஹிச்டமின்கள் உள்ளன.

இது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றவும், கொழுப்பைக் கரைக்கவும் உதவுகிறது.

வெங்காயத்தை உறிக்கும்போது அதிலிருந்து வெளிவரும் வாயு நமக்கு கண்ணீரை வரவழைக்கிறது. அதனால், கண்களில் உள்ள அழுக்குகள் வெளியேறி பார்வையை தெளிவு படுத்துகிறது.

வெங்காய்த்தின் தோலில் இருந்தே அதன் மருத்துவ குணங்கள் ஆரம்பித்து விடுகிறது.

வெங்காயம் செய்யும் மேஜிக்…

1.. வெங்காயத்தை வட்டமாக நறுக்கி மருக்களின் மீது வைத்து ஒரு துணியை வைத்துக் கட்டி அசையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இரவு படுக்கும் போது இதனை கட்டி அப்படியே காலை வரை வைத்திருந்து பின்னர் எடுக்க வேண்டும். இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு செய்து வந்தால் மரு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

2.. வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அதில் சிறிது தேன் சேர்க்க வேண்டும். இந்த ஜூஸை ஒரு நாளைக்கு 2 முறை குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதால் இருமல் உடனே சரியாகிவிடும்.

3.. சமையல் செய்யும் போது அல்லது வேறு சில சந்தர்பங்களில் ஏற்பட்ட சிறிய தீக்காயங்களுக்கு வெங்காயத்தை சிறிதாக நறுக்கி அந்த காயங்கள் மேல் சில நிமிடங்கள் வைக்க வேண்டும். இப்படி செய்தால் தீக்காயங்கள் விரைவில் ஆறிவிடும்.

4.. உங்களுக்கு சளி பிடித்திருந்தால், அதனால் தூங்க முடியாமல் அவதிப்பட்டால் நீங்கள் தூங்கும் இடத்திற்கு அருகே வெங்காயத்தை வைத்துக் கொண்டு உறங்குங்கள். இது நுண்ணுயிரிகளை அழித்து சளியின் தொல்லையை நீக்கி விரைவில் சுகமளிக்கும்.

5.. நீங்கள் காய்ச்சலால் அவதிப்பட்டால், உங்கள் சாக்ஸில் வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் 2 பல் பூண்டு போன்றவற்றை நறுக்கி உள்ளே போட்டு அதை அணிந்துக் கொண்டு தூங்குங்கள். காய்ச்சல் சீக்கிரம் சரியாகி விடும்.

5.. பச்சை வெங்காயத்தை தின்று வந்தால் சைனஸ் பிரச்சனைகளை விரைவில் குணப்படுத்தி விடலாம். மேலும், வெங்காயம் மற்றும் இஞ்சி சேர்த்து டீ போட்டுக் குடிங்கள் அதுவும் சைனஸில் இருந்து விடுதலை அளிக்கும்.

PREV
click me!

Recommended Stories

Coconut Milk for Kids : பெற்றோரே! ஒல்லியா குழந்தைகளை கொழு கொழுனு மாற்ற சூப்பர் வழி! தேங்காய் பால் போதும்!
Rice Flour On Face : சரும சுருக்கம் முதல் கரும்புள்ளிகள் வரை அனைத்தையும் நீக்கும் 'அரிசி மாவு' இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க