உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால்  அசால்டாக இருக்காதீங்க..! அது கல்லீரல் புற்றுநோயாக இருக்கலாம்..!!

Published : Jul 28, 2023, 02:45 PM ISTUpdated : Jul 28, 2023, 02:50 PM IST
உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால்  அசால்டாக இருக்காதீங்க..! அது கல்லீரல் புற்றுநோயாக இருக்கலாம்..!!

சுருக்கம்

உடலில் கல்லீரல் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன என்பதை குறித்து இங்கே பார்ப்போம்.

கல்லீரல் என்பது நம் உடலில் இருக்கும் ஒரு முக்கியமான உறுப்பு ஆகும். இது வயிற்றின் வலது மேற்புறத்தில் ஒரு கால்பந்து அளவிற்கு உள்ளது. கல்லீரல் புற்றுநோய் கல்லீரலில் உள்ள செல்களில் தான் ஆரம்பமாகிறது. ஆரம்பத்திலேயே இந்த புற்நோய்க்கு சிகிச்சை எடுத்தால் அவற்றை எளிதில் குணப்படுத்திவிடலாம். இதில் ஒரு முக்கிய பிரச்சினை  என்னவென்றால், கல்லீரல் புற்றுநோய் முற்றிய பிறகே தான் அவற்றின் அறிகுறிகள் நம் உடலில் தெரியும். எனவே தான் இது மிகவும் ஆபத்தான நோயாகக் கருதப்படுகிறது

பொதுவாக அஜீரணக் கோளாறு தான் கல்லீரல் புற்று நோய்க்கான அறிகுறி என்று நாம் தவறாக நினைத்து கொள்வோம். அஜீரணம் என்பது, சாப்பிட்ட பிறகு நமக்கு ஏற்படும் அசௌகரியம் ஆகும். மேலும் சிலருக்கு கொஞ்சமாக சாப்பிட்ட பிறகும் வயிறு நிரம்பியது போன்ற உணர்வும் மற்றும் குமட்டல் அல்லது வாந்தியும் வரும். இவை இரண்டும் கல்லீரல் புற்று நோய்க்கான அறிகுறிகள் அல்ல. எனவே, வீணாக பயப்பட வேண்டும். இந்த அறிகுறிகள் உங்களுக்கு அடிக்கடி வந்தால் நீங்கள் மருத்துவரை சந்தித்து பரிசோதனை மேற்கொள்வது நல்லது.

இதையும் படிங்க: Liver: கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகள் இவை தான்: இனிமே உஷாரா இருங்கள்!

கல்லீரல் புற்று நோய்க்கான அறிகுறிகள்:

  • அரிப்பு
  • பசியின்மை
  • மஞ்சள் காமாலை
  • திடீரென்று உடல் எடை குறைதல்
  • வலப்புற தோள்பட்டையில் வலி
  • அடிவயிற்றில் வீக்கம் அல்லது நீர் கோர்ப்பது
  • கல்லீரல் பெரிதாவதால், வலப்புற விலா எலும்பின் கீழ் அல்லது இடப்புற விலா எலும்பின் கீழ் ஏதோ தட்டுப்படுவது போன்ற உணர்வு ஏற்படும்.

அஜீரணக் கோளாறு என்றால் என்ன?
அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, பானங்கள் குடிப்பது, பிடிக்காத உணவுகளை சாப்பிடுவது, வெறும் வயிற்றில் மாத்திரைகள் சாப்பிடுவது ஆகியவற்றால் அஜீரணக் கோளாறு ஏற்படும். 

இதையும் படிங்க: பாதங்களில் ஏற்படும் வீக்கம் இந்த நோயின் அறிகுறியா!! அலட்சியம் செய்தால் என்ன ஆகும் தெரியுமா?

அஜீரணக் கோளாறு அறிகுறிகள்:

  • ஏப்பம் மற்றும் வாய்வு வெளியேறுதல்.
  • நெஞ்செரிச்சல் ஏற்படும். குறிப்பாக உணவு சாப்பிட்ட பின் மார்பு பகுதியில் வலியுடன் கூடிய நெஞ்செரிச்சல் உண்டாகும்.

கல்லீரல் புற்றுநோய் உடலில் ஏற்படுத்தும் தாக்கம்?
உங்களது உடலில் கல்லீரல் புற்றுநோய் வளர்ந்து கொண்டே வந்தால் இரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரிக்கும். இவை ஹைபர்கால்சிமியா நோயை உருவாக்கும். மேலும் அடிக்கடி குமட்டல், குழப்பம், மலச்சிக்கல், உடல் பலவீனம், தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனைகளும் வரும். அதுபோல்  உடலில் சர்க்கரையின் அளவு குறைந்ததோடு, சோர்வு மற்றும் மயக்கம் ஏற்படக் கூடும்.

PREV
click me!

Recommended Stories

Ladies Finger in Winter : குளிர்காலத்துல வெண்டைக்காய் 'கண்டிப்பா' சாப்பிடனும் தெரியுமா? நிபுணர்கள் சொல்ற அறிவியல் உண்மை
Green Peas Benefits : பச்சை பட்டாணியை அடிக்கடி சாப்பிடுங்க... பல பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வா அமையும்