பாதுகாப்பற்ற உடலுறவு, மருந்துகள் மட்டுமே ஹெபடைடிஸ் நோய்க்கு காரணமா? கட்டுக்கதைளும் விளக்கமும்..

By Ramya s  |  First Published Jul 28, 2023, 2:29 PM IST

ஜூலை 28, உலக ஹெபடைடிஸ் தினத்தில் டாக்டர் தர்மேஷ் கபூர் ஹெபைடைடிஸ் தொடர்பான கட்டுக்கதைகளையும் அதுதொடர்பான உண்மைகளையும் விளக்கி உள்ளார்.


ஹெபடைடிஸ் (Hepatitis) என்பது ஒரு கல்லீரல் தொற்று நோயாகும். உலகளவில் லட்சக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி, மற்றும் ஈ உள்ளிட்ட பல்வேறு வைரஸ்களால் ஹெபடைடிஸ் ஏற்படலாம். எனினும் இந்த நோய் குறித்து பல்வேறு தவறான புரிதல்கள் உள்ளன. இந்த நிலையில் ஹைதராபாத் யசோதா மருத்துவமனையின் ஆலோசகர் ஹெபடாலஜிஸ்ட் டாக்டர் தர்மேஷ் கபூர் இந்த நோய் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். ஜூலை 28, உலக ஹெபடைடிஸ் தினத்தில் டாக்டர் தர்மேஷ் கபூர் ஹெபைடைடிஸ் தொடர்பான கட்டுக்கதைகளையும் அதுதொடர்பான உண்மைகளையும் விளக்கி உள்ளார்.

கட்டுக்கதை 1 : ஹெபடைடிஸ் வைரஸ்களால் மட்டுமே ஏற்படுகிறது

Tap to resize

Latest Videos

விளக்கம் : ஹெபடைடிஸ் பரவலாக இருந்தாலும், வைரஸ் அல்லாத காரணிகளும் கல்லீரல் அழற்சி மற்றும் சேதத்திற்கு வழிவகுக்கும் என்பதை அடையாளம் காண வேண்டியது அவசியம். அதிகப்படியான மது அருந்துதல், சில மருந்துகள், நச்சுகள்  ஹெபடைடிஸை ஏற்படுத்தும். துல்லியமான நோயறிதல் மற்றும் பொருத்தமான சிகிச்சைக்கு இந்த மாறுபட்ட காரணங்களைப் புரிந்துகொள்வது முக்கியம்.

அதிக நேரம் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்களா? மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகம்..

கட்டுக்கதை 2: ஹெபடைடிஸ் ஏ தீவிரமானது அல்ல

விளக்கம் : ஹெபடைடிஸ் ஏ ஒரு லேசான நோயாக, அதாவது சுயமாக கட்டுப்படுத்தும் நோயாக கருதப்படுகிறது, ஆனால் இது இன்னும் கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்தலாம், குறிப்பாக வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படலாம். இந்த தொற்று அசுத்தமான உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவுகிறது, தடுப்பூசி மற்றும் முறையான சுகாதார நடைமுறைகள் மூலம் தடுப்பு நடைமுறைகளை மேற்கொள்வது அவசியம்.

கட்டுக்கதை 3 : ஹெபடைடிஸ் பி மற்றும் சி ஆண்டி பயாடிக்களால் குணப்படுத்த முடியும்

விளக்கம் : ஆண்டி பயாடிக்குகளால் சிகிச்சையளிக்கப்பட்ட பாக்டீரியா தொற்றுகளைப் போலல்லாமல், ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி மற்றும் ஈ ஆகியவை வைரஸ்களால் ஏற்படுகின்றன. மேலும் இந்த நோயை ஆண்டி பயாடிக்களால் குணப்படுத்த முடியாது. இருப்பினும், கல்லீரல் பாதிப்பைத் தடுக்கவும், சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கும் மிகவும் பயனுள்ள ஆன்டிவைரல் மருந்துகள் உள்ளன. இதன் மூலம் ஹெபிடைடிஸ் நோயை குணப்படுத்தலாம்.

கட்டுக்கதை 5 : ஹெபடைடிஸ் பி மற்றும் சி போதைப்பொருள்களைப் பயன்படுத்தும் அல்லது பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடும் நபர்களை மட்டுமே பாதிக்கும்.

விளக்கம் : ஊசிகளைப் பகிர்ந்துகொள்வது அல்லது பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுவது ஹெபடைடிஸ் பி மற்றும் சி நோய்த்தொற்றின் அபாயத்தை அதிகரிக்கும் என்பது உண்மைதான். ஆனால், அசுத்தமான இரத்தத்துடன் இரத்தமேற்றுதல், கிருமி நீக்கம் செய்யப்படாத மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்துதல் அல்லது நோய்த்தொற்று போன்ற பிற வழிகளிலும் இந்த வைரஸ் பரவக்கூடும். முறையான சோதனை மற்றும் சிகிச்சையை செய்வதன் மூலம் நோய் பாதிப்புகளை குறைக்கலாம்.

கட்டுக்கதை 5 : ஹெபடைடிஸ் பி மற்றும் சி எப்போதும் வெளிப்படையான அறிகுறிகளைக் காட்டும்

விளக்கம் : ஹெபடைடிஸ் பி மற்றும் சி இரண்டும் நீண்ட காலத்திற்கு அறிகுறியற்றதாக இருக்கலாம், அதாவது இந்த பாதிப்பில் எந்த அறிகுறிகளுமே இருக்காது. இது கல்லீரல் பாதிப்பு அதிகரிக்க வழிவகுக்கும். குறிப்பிடத்தக்க கல்லீரல் சிக்கல்கள் ஏற்படும் வரை பல நபர்கள் தங்கள் தொற்று பற்றி அறியாமல் இருக்கலாம். வழக்கமான சோதனை, குறிப்பாக அதிக ஆபத்துள்ள குழுக்களுக்கு, முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சரியான நேரத்தில் தலையீடு அவசியம்.

கட்டுக்கதை 6: ஹெபடைடிஸுக்கு எதிரான தடுப்பூசி பெரியவர்களுக்கு தேவையற்றது

விளக்கம்: ஹெபடைடிஸ் தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இன்றியமையாதது, குறிப்பாக அவர்களின் தொழில், வாழ்க்கை முறை அல்லது ஹெபடைடிஸ் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு பயணம் செய்வதால் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கும் அவசியம். ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி ஆகியவற்றை தடுப்பூசி தடுக்கலாம், கல்லீரல் மற்றும் சுகாதார அமைப்பில் நோய்த்தொற்றின் பாதிப்பை குறைக்கலாம்.

கட்டுக்கதை 7 : ஹெபடைடிஸ் குணப்படுத்த முடியாதது மற்றும் எப்போதும் கல்லீரல் செயலிழப்பிற்கு வழிவகுக்கிறது

விளக்கம் : ஹெபடைடிஸின் சில வடிவங்கள் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் கடுமையான கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தலாம், முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தகுந்த மருத்துவ சிகிச்சை ஆகியவை விளைவுகளை கணிசமாக குறைப்பதுடன், நோய் முன்னேற்றத்தைத் தடுக்கலாம். ஹெபடைடிஸுக்கு பயனுள்ள சிகிச்சைகள் உள்ளன. 

கட்டுக்கதை 8 :  ஹெபடைடிஸ் வளரும் நாடுகளில் உள்ள நபர்களை மட்டுமே பாதிக்கிறது

விளக்கம் : ஹெபடைடிஸ் ஒரு உலகளாவிய சுகாதார பிரச்சினை ஆகும். இது வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் உள்ள மக்களை பாதிக்கிறது. பரவல் வேறுபட்டாலும், இந்த நோயை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு விழிப்புணர்வு, தடுப்பு மற்றும் சுகாதார சேவைகளுக்கான அணுகல் உலகளவில் அவசியம்.

உலக ஹெபடைடிஸ் தினம்: விழிப்புணர்வு ஏன் முக்கியமானது

ஹெபடைடிஸ் பற்றிய தவறான எண்ணங்களை அகற்றுவது, துல்லியமான நோயறிதல், சரியான சிகிச்சை மற்றும் பொது மக்களில் இந்த தொற்று கல்லீரல் நோயைத் தடுப்பதற்கு முக்கியமானது. பல்வேறு வகையான ஹெபடைடிஸ், அவற்றின் பரவும் முறைகள், தடுப்பூசியின் முக்கியத்துவம், முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சரியான சிகிச்சை பற்றி பொதுமக்களுக்குக் கற்பிப்பதில் மருத்துவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், துல்லியமான தகவல்களை ஊக்குவிப்பதன் மூலமும், ஹெபடைடிஸின் பாதிப்பை குறைக்கவும், இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் முடியும்" என்று டாக்டர் தர்மேஷ் கபூர் தெரிவித்தார்.

வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் இருக்கா?

click me!