காலை எழுந்ததும் அடுக்கடுக்கா தும்மல் வருதா?.. அதை உதாசின படுத்தவேண்டாம் - டாக்டர்ஸ் சொல்லும் அட்வைஸ்!

By Ansgar R  |  First Published Jul 27, 2023, 5:16 PM IST

தும்மல் என்பது மனிதன் உட்பட பல உயிரினங்களிடம் காணப்படும் வெகு வெகு சாதாரணமான ஒன்றுதான். அதிலும் குறிப்பாக ஒரு நாளைக்கு ஓரிரு முறைகள் தும்மல் வருவது மிகவும் நல்லது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


மூக்கில் உள்ள துவாரங்கள் வழியாக சில தூசிகளோ, பணி அல்லது புகை உள்ளிட்டவை நுழைந்தால் நம் உடலில் தன்னிச்சையாக செயல்படும் ஒரு எதிர்வினையாக தோன்றுவதுதான் தும்மல். 

நம்மில் பலருக்கு காலை எழுந்த உடனேயே ஓரிரு தும்மல்கள் வரும், இதை நம் அன்றாட வாழ்வில் பலமுறை அனுபவித்திருப்போம். ஆனால் ஒரு சிலருக்கு காலை எழுந்ததும் வருகிற ஓரிரு தும்மலை தாண்டி, அவர்கள் தண்ணீரில் கை வைத்ததும் அல்லது குளிரான இடங்களில் நிற்கும் பொழுதும் அடுக்கடுக்காக பல தும்மல்கள் வந்து கொண்டே இருக்கும். 

Latest Videos

undefined

இதன் அளவு என்பது மிக மிக அதிகமாகவே இருக்கும், சிலருக்கு 15 முதல் 20 தும்மல்கள் வரும், இன்னும் சில நேரங்களில் மூக்கே சிவந்து போகும் அளவிற்கு 30 முதல் 50க்கும் மேற்பட்ட தும்மல்கள் தொடர்ச்சியாக வரும். வெகு சிலருக்கு இதுபோன்று அதிகமாக தும்முவதால் மூக்கில் இருந்து ரத்தம் வரும் அளவிற்கான நிலையும் செல்லும். 

மழைக்காலத்தில் இரைப்பை பிரச்சனைகள்.. என்ன செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது?

அப்படிப்பட்டவர்கள் அதை உநிச்சயம் உதாசீன படுத்தக்கூடாது என்றும், அவர்கள் என்ன செய்யவேண்டும் என்றும் பிரபல மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். காலை எழுந்ததும் அதிக அளவில் தும்மல் வரும்பட்சத்தில் அவர்களுக்கு Allergic rhinitis இருப்பதாக அர்த்தம். 
  
அவர்கள் உடனடியாக cbc என்ற சோதனையை செய்துபார்க்கவேண்டும், இதனை hemogram என்றும் அழைப்பார்கள். இதை வைத்துதான் நமக்கு eosinophilia இருக்கின்றதா? இல்லையா? என்பது தெரியவரும். மேலும் அவர்கள் IgE என்ற மற்றொரு சோதனையையும் மேற்கொள்ளலாம். 

இவற்றை செய்யவதால் நிச்சயம் அவர்களுக்கு eosinophilia பிரச்சனை இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியவரும். அதனை வைத்து அவர்கள் உடனடியாக அதற்கு உரிய மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று அவர்கள் அதை நிரவர்தி செய்துகொள்ளலாம்.

சின்ன வேலை செய்தால் கூட சோர்வாக இருகிறீர்களா? இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல..!!

click me!